திருப்புகழ் 380 முழுகிவட  (திருவருணை)
Thiruppugazh 380 muzhugivada  (thiruvaruNai)
Thiruppugazh - 380 muzhugivada - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான

......... பாடல் .........

முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
     முழுமதிநி லாவி னுக்கும் ...... வசையாலும்

மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
     முதியமத ராஜ னுக்கு ...... மழியாதே

புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
     புதுமையினி லாறி ரட்டி ...... புயமீதே

புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
     பொருமயிலி லேறி நித்தம் ...... வரவேணும்

எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
     ளெழுதரிய கோபு ரத்தி ...... லுறைவோனே

இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
     இளமுலைவி டாத சித்ர ...... மணிமார்பா

செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
     சிவனைமுத லோது வித்த ...... குருநாதா

திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
     சிறையடைய மீள விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முழுகி வடவா முகத்தின் எழு கனலிலே பிறக்கு(ம்) முழு
மதி நிலாவினுக்கும்
... வடவாமுக அக்கினியில் முழுகி அங்கு பெற்ற
சூட்டுடன் தோன்றும் பூரண சந்திரனுடைய ஒளிக் கிரணங்களுக்கும்,

வசையாலும் மொழியு(ம்) மட மாதருக்கும் இனிய தனி வேய்
இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே
... நிந்தனைப்
பேச்சு பேசும் மடமையுடைய மாதர்களுக்கும், இனிமை வாய்ந்த ஒப்பற்ற
புல்லாங்குழலின் இசை ஒலிக்கும், பழையவனாகிய மன்மத ராஜனுடைய
சேட்டைகளுக்கும் உட்பட்டு (நான்) அழிந்து போகாமல்,

புழுகு திகழ் நீபம் அ(த்)தில் அழகிய குரா நிரைத்த
புதுமையினில் ஆறு இரட்டி புய(ம்) மீதே
... புனுகு சட்டத்திலும்,
(மணம்) விளங்கும் கடம்பிலும், அழகிய குரா மலரிலும் வரிசையாக
அமைந்த (மாலைகளின்) புதுமைத் தோற்றம் கொண்ட (உனது)
பன்னிரு புயங்களின் மேல்

புணரும் வகை தான் நினைத்தது உணரும் வகை நீல சித்ர
பொரு(ம்) மயிலில் ஏறி நித்தம் வரவேணும்
... தழுவிச் சேரும்
வழியையே (நான்) நினைத்துள்ள உண்மையை உலகோர் தெரியும்படி,
நீல நிறம் கொண்ட, அழகிய, சண்டை செய்ய வல்ல மயிலில் ஏறி நாள்
தோறும் வர வேண்டும்.

எழு(ம்) மகர வாவி சுற்று(ம்) பொழில் அருணை மா நகர்க்குள்
எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே
... மகர மீன்கள் துள்ளி
எழும் தடாகங்கள் சுற்றிலும் உள்ள சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை
என்னும் நகரில் எழுந்தருளிய, எழுதுவற்கு முடியாத அழகுடைய
கோபுரத்தில் வீற்றிருப்பவனே,

இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இளமுலை
விடாத சித்ர மணிமார்பா
... இடை துவள வேடப்பெண் வள்ளியின்
ஆடை அசையவும், பருத்த இளமை வாய்ந்த அவளுடைய மார்பினை
விடாத அழகிய மார்பனே,

செழு மகுட நாக(ம்) மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த
சிவனை முதல் ஓதுவித்த குரு நாதா
... செழுமை கொண்ட
பணாமுடி உடைய பாம்பு, நெருக்கமாக ஒழுகி விழும் கங்கை நீர்
இவற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானுக்கு முன்பு பிரணவத்தை
உபதேசம் செய்த குரு நாதனே,

திசை முகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை
அடைய மீள விட்ட பெருமாளே.
... பிரமன், திருமால் பின்னும் பல
அருமையான தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த (சூரனின்)
சிறையினின்றும், அவர்கள் மீளும்படி வெளிக்கொண்டு வந்த பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவி பாடியது போல் அமைந்தது. சந்திரன், மகளிரின் வசைச் சொற்கள்,
புல்லாங்குழல் இசை, மன்மதன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக்
கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.203  pg 2.204  pg 2.205  pg 2.206 
 WIKI_urai Song number: 522 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 380 - muzhugivada (thiruvaNNAmalai)

muzhukivada vAmu kaththi nezhukanali lEpi Rakku
     muzhumathini lAvi nukkum ...... vasaiyAlum

mozhiyumada mAtha rukku miniyathani vEyi saikku
     muthiyamatha rAja nukku ...... mazhiyAthE

puzhukuthikazh neepa maththi lazhakiyaku rAni raiththa
     puthumaiyini lARi ratti ...... puyameethE

puNarumvakai thAni naiththa thuNarumvakai neela sithra
     porumayili lERi niththam ...... varavENum

ezhumakara vAvi sutRu pozhilaruNai mAna karkku
     Lezhuthariya kOpu raththi ...... luRaivOnE

idaithuvaLa vEdu vacchi padamasaiya vEka naththa
     iLamulaivi dAtha sithra ...... maNimArpA

sezhumakuda nAka moyththa ozhukupunal vENi vaiththa
     sivanaimutha lOthu viththa ...... gurunAthA

thisaimukanmu rAri matRu mariyapala thEva rutRa
     siRaiyadaiya meeLa vitta ...... perumALE.

......... Meaning .........

muzhuki vadavA mukaththin ezhu kanalilE piRakku(m) muzhu mathi nilAvinukkum: To the rays of the hot full moon that has taken a dip in the inferno at VadavAmuka (the destructive fire that erupts from the North Pole at the end of the aeon),

vasaiyAlum mozhiyu(m) mada mAtharukkum iniya thani vEy isaikkum muthiya matha rAjanukkum azhiyAthE: to the foolish women who are scandal-mongering, to the sweet music from the matchless flute and to the mischief played upon me by the good old God of Love, Manmathan, I am not prepared to succumb;

puzhuku thikazh neepam a(th)thil azhakiya kurA niraiththa puthumaiyinil ARu iratti puya(m) meethE puNarum vakai thAn ninaiththathu uNarum vakai neela sithra poru(m) mayilil ERi niththam varavENum: instead, I am contemplating the ways and means of hugging Your twelve hallowed shoulders that wear a new look, smeared with civet paste and adorned with garlands of fragrant kadappa and pretty kurA flowers, bedecked in rows; the truth of my contemplation should be revealed to the entire world by Your visiting me everyday, mounting the beautiful and blue peacock, capable of fighting a war, Oh Lord!

ezhu(m) makara vAvi sutRu(m) pozhil aruNai mA nakarkkuL ezhutha ariya kOpuraththil uRaivOnE: This place ThiruvaNNAmalai has many groves surrounded by ponds in which the makara fish keep leaping; You are seated in its temple tower whose grandeur is beyond description in writing, Oh Lord!

idai thuvaLa vEduvacchi padam asaiyavE kanaththa iLamulai vidAtha sithra maNimArpA: The damsel of the hunters stands there with her waist caving in and her attire swaying; You never stop hugging the bulging and youthful bosom of that VaLLi with Your hallowed chest, Oh Lord!

sezhu makuda nAka(m) moyththa ozhuku punal vENi vaiththa sivanai muthal Othuviththa kuru nAthA: He holds on His matted hair a serpent with a gorgeous hood and the river Gangai which gushes with water; to that Lord SivA You once preached the PraNava ManthrA, Oh Great Master!

thisai mukan murAri matRum ariya pala thEvar utRa siRai adaiya meeLa vitta perumALE.: Brahma, VishNu and other rare celestials were all imprisoned (by the demon SUran); You freed them from that prison and brought them out, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva where the heroine portrays the pangs of separation from Lord Muruga.
The moon, the scandal-mongering women, the music from the flute and the Love-God Manmathan are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 380 muzhugivada - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]