திருப்புகழ் 358 உரைக் காரிகை  (திருவானைக்கா)
Thiruppugazh 358 uraikkArigai  (thiruvAnaikkA)
Thiruppugazh - 358 uraikkArigai - thiruvAnaikkASri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தான ...... தந்ததான

......... பாடல் .........

உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
     ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட

உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
     டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான்

குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
     குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்

குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
     யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
     அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட்

டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
     லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே

திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
     சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய்

திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
     திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர் ... சொல்லப்டுகின்ற
காரிகை என்னும் யாப்பிலக்கண நூலில் (நிபுணர் என்னும்) முதலான
பேர் எனக்குத் தான்.

உனக்கோ மடல் கோவை ஒன்று பாட ... உன் பேரில் (96
சிற்றிலக்கிய பிரபந்த வகைகளில்) ஒன்றான மடல் கோவையில் கவி
ஒன்று பாடுவதற்கு,

உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி ... காலம்
தாமதிக்காமல், யானையின் தந்தப் பிடி அமைந்த
எழுத்தாணியைத் தேடி எடுத்து,

உனைப் பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான் ... உலகத்தில்
உன்னை நிகரானவர்கள் யாரையும் நான் கண்டதில்லை,

குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே குடிக்காண் ...
பெருமைக்கு உரிய வித்தை வல்ல கவி அரசர்களுக்கு நீ ஒரு
புகலிடமாக விளங்குகிறாய்,

முடிப்போடு கொண்டு வா பொன் குலப் பூண் இரத்நாதி
பொன் தூசு எடுப்பாய்
... பண முடிச்சோடு பொற் காசுகளைக்
கொண்டு வா, சிறந்த ஆபரணங்களையும் ரத்தினம் முதலியவற்றையும்
அழகிய ஆடைகளையும் எடுத்துக் கொண்டு வா,

எனக் கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ ... என்றெல்லாம்
சொல்லிப் புகழும் துன்பத்தில் நான் அகப்பட்டு, மதிப்பு குன்றி
வாழ்வேனோ?

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய் ... இடுப்பில்
ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த,
தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று,

அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர்
படைத்தாய்
... அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும்,
நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன்
என்னும் புகழைக் கொண்டாய்.

புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே ...
நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில்
வீற்றிருக்கும் செவ்வேளே,

திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம்
உற்றோர் சிலந்தி நூல் செய்
... அலைகள் வீசும் காவிரியின் கரையில்
இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால்
அமைக்கப் பெற்ற

திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர் ... (திருவானைக்காவின்)
அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க

திருச் சாலகச் சோதி தம்பிரானே. ... அழகிய சிலந்தி வலைக்
கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.141  pg 2.142 
 WIKI_urai Song number: 500 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 358 - uraik kArigai (thiruvAnaikkA)

uraikkA rikaippA lenakkE muthaRpE
     runakkO madaRkOvai ...... yonRupAda

uzhappA thipakkO dezhuththA NiyaiththE
     dunaippA riloppArkaL ...... kaNdilEnyAn

kuraikkA navithyA kavippU parukkE
     kudikkAN mudippOdu ...... koNduvApon

kulappU NirathnA thipotRU seduppA
     yenakkU RidarppAdin ...... manguvEnO

araikkA daisutRAr thamizhkkU daliRpOy
     anaRkE punaRkEva ...... rainthaEdit

taRaththA yenappEr padaiththAy punaRsE
     laRappAy vayaRkeezha ...... marnthavELE

thiraikkA virikkE karaikkA nakaththE
     sivathyA namutROrsi ...... lanthinUlsey

thirukkA vaNaththE yiruppA rarutkUr
     thiruchchA lakacchOthi ...... thambirAnE.

......... Meaning .........

uraik kArikaip pAl enakkE muthal pEr: "In the field of the famous grammatical text called kArikai, I am considered the foremost expert;

unakkO madal kOvai onRu pAda: to sing in praise of you a song of the type 'madal kOvai' (one of the ninety-six kinds of mini-literature),

uzhappAthu ipak kOdu ezhuththANiyaith thEdi: without wasting time, I shall look for a special scriber with a handle carved of ivory;

unaip pAril oppArkaL kaNdilan yAn: I have not seen anyone in the world matching your greatness;

kuraikku Ana vithyA kavip pUparukkE kudikkAN: you are the refuge for all stalwart-poets who have the great skill of composing songs;

mudippOdu koNdu vA pon kulap pUN irathnAthi pon thUsu eduppAy: go ahead and bring a knotted bundle of golden coins; bring a lot of fine jewellery, precious gems and nice clothes" -

enak kURi idarppAdin manguvEnO: so saying, should I be ensnared in the misery of praising others, suffering humiliation?

araikku Adai sutRAr thamizhk kUdalil pOy: There were many ChamaNas who did not wrap any clothes around their waist (but wore grassy reeds); they were in Madhurai where the language, Tamil, prospered; You went there (as ThirugnAna Sambandhar);

anaRkE punaRkE varaintha Edittu aRaththAy enap pEr padaiththAy: (to defeat the ChamaNas in debates) You placed palm-leaves (on which holy poems were scribed) in fire and water and earned fame as the Treasure of Justice!

punal sEl aRap pAy vayal keezh amarntha vELE: You are seated in the eastern side of the paddy fields where the sEl fish swim in water in abundance, Oh reddish Lord!

thiraik kAvirikkE karaik kAnakaththE siva thyAnam utROr silanthi nUl sey: There was a spider, in deep contemplation on Lord SivA, living in a forest on the bank of the wavy river KAvEri; it had spun a web

thiruk kAvaNaththE iruppAr aruL kUr: which served as a grand canopy (in the town of ThiruvAnaikkA) under which He is seated graciously;

thiruc chAlakac chOthi thambirAnE.: sitting in the form of an effulgence under the beautiful web woven by the spider is Lord SivA, and You are His Master, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 358 uraik kArigai - thiruvAnaikkA

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]