திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 351 வாய்ந்தப்பிடை (காஞ்சீபுரம்) Thiruppugazh 351 vAindhappidai (kAnjeepuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன தாந்தத்தன தானன தானன ...... தனதானா ......... பாடல் ......... வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய நீந்திப்பது மாதியை மீதினி லூர்ந்துற்பல வோடையில் நீடிய ...... உகள்சேலை வார்ந்துப்பக ழீயெதி ராகிமை கூர்ந்துப்பரி யாவரி சேரவை சேர்ந்துக்குழை யோடுச லாடிய ...... விழியாலே சாய்ந்துப்பனை யூணவ ரானபொ லாய்ந்துப்பணி னாரிரு தாளினில் வீழ்ந்திப்படி மீதினி லேசிறி ...... தறிவாலே சாந்தப்பிய மாமலை நேர்முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்திப்படி போகினு மோர்மொழி ...... மறவேனே சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ காந்தப்பெரு நாதனு மாகிய ...... மதராலே தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் காந்தப்பத மாறியு லாவுய ராந்தற்குரு நாதனு மாகியெ போந்தப்பெரு மான்முரு காவொரு ...... பெரியோனே காந்தக்கலு மூசியு மேயென ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு காஞ்சிப்பதி மாநகர் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய பதும ஆதியை நீந்து உற்பல ஓடையில் மீதினில் ஊர்ந்து நீடிய உகள் சேலை ... நீரில் நிலை நின்று நீண்ட நாள் விளங்கிய தாமரையாகிய முதன்மையான பொருளை, (தனது அழகால்) கடந்து விளங்கும் நீலோற்பல மலர் உள்ள ஓடையில் நெடுந்தூரம் பாய வல்ல சேல் மீனை வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை கூர்ந்துப் பரியா(க) வரி சேர் அவை சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய விழியாலே ... நேர் ஒத்து, அம்புக்குப் போட்டியாக எதிர்த்து, அஞ்சனம் மிகவும் பூசப்பட்டு, அந்த மையைத் தாங்குவதாகி, ரேகைகள் பொருந்த, கூர்மை கொண்டு, (காதில் உள்ள) குண்டலத்தோடு ஊஞ்சலாடிய கண்களால், சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்ந்துப் ப(பா)ணினார் இரு தாளினில் வீழ்ந்து ... (என் ஒழுக்கம்) தளர்ந்து, பழைய பனங் கள்ளை உண்டவர் மயக்கம் கொண்டது போல் மயங்கிச் சிறிது ஓய்ந்து, இசை பாடும் பொதுமகளிருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து கிடந்து, இப் படி மீதினிலே சிறிது அறிவாலே சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்து இப்படிப் போகினும் ஓர் மொழி மறவேனே ... இந்தப் பூமியின் மீது அற்ப அறிவு காரணமாக, சந்தனம் பூசப்பட்ட பெரிய மலை போன்ற மார்பைச் சேர்ந்துப் படிந்து, வீணாகக் காலம் கழித்து, உயிர் அழிந்து இவ்வாறு கெட்டுப் போனாலும், (நீ சொன்ன) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன். சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ காந்தப் பெரு நாதனும் ஆகிய மதராலே ... பெருகிவந்த நீர் வெள்ளமாகவே பாய்ந்து பரக்கும் அந்த வேளையில் (ஊழிக் காலத்தில்), ஓர் உயிரும் இல்லாமல் ஒளி வீசும் பெரிய கால மூர்த்தியாகிய சிவபெருமான் களிப்பினால், தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண ...... வெனதாளம் ... (இவ்வாறு) தாளங்கள் ஒலிக்க, காந்தப் பத(ம்) மாறி உலாவு உயர் ஆந்தன் குரு நாதனும் ஆகியெ போந்தப் பெருமான முருகா ஒரு பெரியோனே ... அழகிய திருவடிகளை மாற்றி மாற்றி நடன உலாவை மிகச் செய்யும் (எல்லாவற்றுக்கும்) முடிவானவனாகிய சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு குரு நாதனாக வந்துள்ள பெருமானாகிய முருகனே, ஒப்பற்ற பெரியோனே, காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்) ... காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே. ... காஞ்சி என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க, மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.123 pg 2.124 pg 2.125 pg 2.126 WIKI_urai Song number: 493 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 351 - vAindhappidai (kAnjeepuram) vAynthappidai needuku lAviya neenthippathu mAthiyai meethini lUrnthuRpala vOdaiyil neediya ...... ukaLsElai vArnthuppaka zheeyethi rAkimai kUrnthuppari yAvari sEravai sErnthukkuzhai yOdusa lAdiya ...... vizhiyAlE sAynthuppanai yUNava rAnapo lAynthuppaNi nAriru thALinil veezhnthippadi meethini lEsiRi ...... thaRivAlE sAnthappiya mAmalai nErmulai sErnthuppadi veeNini lEyuyir mAynthippadi pOkinu mOrmozhi ...... maRavEnE sArnthapperu neerveLa mAkave pAynthappozhu thArumi lAmale kAnthapperu nAthanu mAkiya ...... matharAlE thAnthakkida thAkida thAkida thOnthikkida thOthimi thOthimi sEnjekkaNa sEkeNa sEkeNa ...... venathALam kAnthappatha mARiyu lAvuya rAnthaRkuru nAthanu mAkiye pOnthapperu mAnmuru kAvoru ...... periyOnE kAnthakkalu mUsiyu mEyena Aynthuththami zhOthiya seerpeRu kAnjippathi mAnakar mEviya ...... perumALE. ......... Meaning ......... appu idai vAynthu needu kulAviya pathuma Athiyai neenthu uRpala Odaiyil meethinil Urnthu neediya ukaL sElai: There is a brook in which a blue lily has blossomed with its beauty surpassing that of a long-standing lotus, the primary flower on the waterfront; the sEl fish is capable of swimming a long distance in that brook; vArnthup pakazhee ethir Aki mai kUrnthup pariyA(ka) vari sEr avai sErnthuk kuzhaiyOdu Usal Adiya vizhiyAlE: resembling that fish, the eyes of the whores vie with the arrows and display thick paint of black pigment; wearing that dye, their sharp eyes, showing tiny blood vessels, swing along with the swaying ear-studs; because of those eyes, sAynthup panai UN avar Ana pol Aynthup pa(a)NinAr iru thALinil veezhnthu: my character has weakened making me feel inebriated like those who drink old toddy from the palm tree; I had fallen at both feet of those singing whores; ip padi meethinilE siRithu aRivAlE sAnthu appiya mA malai nEr mulai sErnthuppadi veeNini lEyuyir mAynthu ippadip pOkinum Or mozhi maRavEnE: on this earth, due to my limited intellect, I had settled cosily upon their large mountain-like bosom smeared with sandalwood paste, wasting my time; although my life went down the drain like this, I shall never forget the matchless word that You kindly preached to me! sArnthap peru neer ve(L)LamAkavE pAyntha ap pozhuthu Arum illAmale kAnthap peru nAthanum Akiya matharAlE: At the final hour of reckoning (the end of the aeon) when a deluge of water floods spreads, there is not even a semblance of life anywhere while the great Lord, SivA, transcending all times, dances ecstatically thAnthakkida thAkida thAkida thOnthikkida thOthimi thOthimi sEnjekkaNa sEkeNa sEkeNa ...... venathALam: to (this) loud beat; kAnthap patha(m) mARi ulAvu uyar Anthan kuru nAthanum Akiye pOnthap perumAna murukA oru periyOnE: shifting His hallowed feet alternately, He dances for a long time; He is the ultimate Lord in charge of destruction; You have come as the Supreme Master to that Lord SivA, Oh MurugA! You are great and matchless! kAnthak ka(l)lum UsiyumE ena Aynthuth thamizh Othiya seer peRu(m): In this place, the teacher and the taught* recite Tamil songs together, in unison like the magnetic stone and the iron needle; kAnjip pathi mA nakar mEviya perumALE.: this is the famous and big town KAnchipuram, which is Your abode, Oh Great One! |
* In Kumarak kOttam section of KAnchipuram, the poet Kacchiyappa SivAchAriyAr used to lay down every night the palm-leaves containing his poems on Kandha PurANam - the story of Lord KandhA - in front of the feet of Murugan; the next morning an edited version of the songs would appear on the palm-leaves. The reference here may be considered to denote the Master Murugan and the student Kacchiyappar. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |