திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 348 மயல் ஓதும் (காஞ்சீபுரம்) Thiruppugazh 348 mayalOdhum (kAnjeepuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தந்த தனதான தந்த தனதான தந்த ...... தனதான ......... பாடல் ......... மயலோது மந்த நிலையாலும் வஞ்ச வசைபேசு கின்ற ...... மொழியாலும் மறிபோலு கின்ற விழிசேரு மந்தி மதிநேரு கின்ற ...... நுதலாலும் அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை ...... வளையாலும் அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து அடியேன்ம யங்கி ...... விடலாமோ மயிலேறி யன்று நொடிபோதி லண்டம் வலமாக வந்த ...... குமரேசா மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள் மலைமாது தந்த ...... முருகேசா நயவானு யர்ந்த மணிமாட மும்பர் நடுவேநி றைந்த ...... மதிசூழ நறைவீசு கும்ப குடமேவு கம்பை நகர்மீத மர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் ... காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் ... மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்) நடையாலும் அங்கை வளையாலும் ... வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ ... என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா ... மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா ... மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ ... மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே. ... (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.117 pg 2.118 WIKI_urai Song number: 490 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 348 - mayal Othum (KAncheepuram) mayalOthu mantha nilaiyAlum vanja vasaipEsu kinRa ...... mozhiyAlum maRipOlu kinRa vizhisEru manthi mathinEru kinRa ...... nuthalAlum ayilEni karntha vizhiyAlum anja nadaiyAlum angai ...... vaLaiyAlum aRivEya zhinthu ayarvAki nainthu adiyEnma yangi ...... vidalAmO mayilERi yanRu nodipOthi laNdam valamAka vantha ...... kumarEsA maRithAvu sengai aranA ridamkoL malaimAthu thantha ...... murukEsA nayavAnu yarntha maNimAda mumpar naduvEni Raintha ...... mathisUzha naRaiveesu kumpa kudamEvu kampai nakarmeetha marntha ...... perumALE. ......... Meaning ......... mayal Othum antha nilaiyAlum vanja vasai pEsukinRa mozhiyAlum: With the suggestive appearance (of the whores) announcing their passion, their speech mixed with treachery and scandal-mongering, maRi pOl ukinRa vizhi sErum anthi mathi nErukinRa nuthalAlum: their crescent moon-like forehead adjoining their deer-like eyes, ayilE nikarntha vizhiyAlum anja(m) nadaiyAlum angai vaLaiyAlum: their spear-like eyes, their gait like that of the swan and the bangles on their beautiful arms, aRivE azhinthu ayarvAki nainthu adiyEn mayangi vidalAmO: they have destroyed my intellect, by weakening me and depressing my heart; is it fair that I, the poor slave, should suffer from such delusion? mayil ERi anRu nodi pOthil aNdam valamAka vantha kumarEsA: Oh Lord KumarA, mounting the peacock You once flew around the world in a fraction of a second! maRi thAvu sengai aranAr idamkoL malaimAthu thantha murukEsA: There is a deer that leaps up to His reddish hand; on the left side of that Lord SivA, DEvi PArvathi is concorporate; and You are Her child, Oh Lord MurugA! naya vAn uyarntha maNi mAdam umpar naduvE niRaintha mathi sUzha: On the top of, and inside, the decorated, beautiful and sky-high terraces of this place, the full moon spreads its light and shines glowingly; naRai veesu kumpa kuda(m) mEvu kampai nakar meethu amarntha perumALE.: this is the town KAncheepuram, on the banks of the River Kampai, where fragrant pots and vessels (meant for ritualistic worship) are piled up; This is Your abode where You are seated with relish, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |