![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 331 அற்றைக் கற்றை (காஞ்சீபுரம்) Thiruppugazh 331 atRaikkatRai (kAnjeepuram) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு mp3 | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான ......... பாடல் ......... அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் ...... பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் ...... பொரும்வேலா சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் ...... களைவோனே கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து ... அன்றைக்கு அன்றைக்கு (நாள் தோறும்) அலங்கரித்து, அலங்கரித்து, அத்தத்து அத்தம் தருவோர் தாள் அர்ச்சித்து இச்சித்து ... தாம் பெற்ற பொருளுக்குத் தக்க மறு உதவியைக் கொடுப்பவர்களாகிய விலை மகளிர்களுடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும், அக்கத்து அக்கம் திக்குத் தொக்குக் குடில் பேணி ... கண்ணுக்குக் கண்ணாய் பாதுகாத்தும், இந்த உலகின் திக்குகள் தோறும் சென்று கூடி, என் உடலைப் போற்றி வளர்த்து, செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று ... நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, செத்துச் செத்துப் பிறவாதே ... இறந்துபட்டு இறந்துபட்டுப் பல பிறவிகளை அடையா வண்ணம் செப்பச் செப்ப பச்சைப் பச்சை ... மேலும் மேலும் சொல்லித் துதிக்க, உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய செச்சைச் செச்சைக் கழல் தாராய் ... சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்து அருளுக. துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கை ... நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை துட்கத் திட்கப் பொரும் வேலா ... பயப்பட்டு திடுக்கிடும்படி சண்டை செய்த வேலனே, சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க ... பரிசுத்தமான, பேரன்புடைய, அழகிய மார்பினை உடைய சொர்க்கத் தத்தைக்கு இனியோனே ... விண்ணுலகக் கிளியான தேவயானைக்கு இனிமையானவனே, கற்றைப் பொற்றைப் பற்றக் குத்தி ... திரண்ட மலையாகிய கிரெளஞ்சத்தை தாக்கிக் குத்தி, கத்தக் கத்த களைவோனே ... (அம் மலை அரக்கன்) கூச்சலிட்டு அழ அழித்துத் தொலைத்தவனே, கற்புச் சத்தி பொற்புச் சத்தி ... கற்புக்கு அணிகலமாம் தேவி பார்வதி அளித்த அழகிய சக்திவேலை ஏந்தும் பெருமாளே, கச்சிச் சொக்கப் பெருமாளே. ... காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.75 pg 2.76 WIKI_urai Song number: 473 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 331 - atRaik katRai (kAnjeepuram) atRaik katRaik koppith thoppith thaththath thaththath ...... tharuvOrthAL arcchith thicchith thakkath thakkath thokkuth thikkuk ...... kudilpENi cetRaip puRcoR katRuk katRu ceththuc ceththup ...... piRavAthE ceppac ceppap pacchaip pacchai cecchaic cecchaik ...... kazhalthArAy thutRup piRpuk kutRak kokkaith thutkath thitkap ...... porumvElA suththap paththic cithrac corkkac corkkath thaththaik ...... kiniyOnE katRaip potRaip patRak kuththik kaththak kaththak ...... kaLaivOnE kaRpuc caththip poRpuc caththik kacchic cokkap ...... perumALE. ......... Meaning ......... atRaik katRaik koppith thoppiththu: Adorning themselves day after day, aththaththu aththath tharuvOrthAL arcchiththu icchiththu: the whores compensate in service for the money they earn; adoring their feet, hankering after them, akkath thakkath thokkuth thikkuk kudilpENi: treating them like the pupil of my eye, and enjoying carnal pleasure in all directions of the world, I took special care in nourishing this body. cetRaip puRcoR katRuk katRu: I learnt a lot of obscene words and foul language. ceththuc ceththup piRavAthE: I do not want to (lead such life and) die repeatedly and take many births again and again. ceppac ceppap pacchaip pacchai cecchaic cecchaik kazhalthArAy: (For that) I have to keep on meditating on Your name; kindly bless me with Your cool and hallowed feet adorned with reddish vetchi flowers! thutRup piRpuk kutRak kokkaith thutkath thitkap porumvElA: You chased the demon SUran, followed him right into the sea where he disguised himself as a mango tree; and You startled him with Your mighty fighting, Oh Lord with the spear! suththap paththic cithrac corkkac corkkath thaththaik kiniyOnE: You are the beloved consort of DEvayAnai, the parrot of the celestial land, who is spotlessly pure, full of love and is blessed with beautiful bosom! katRaip potRaip patRak kuththik kaththak kaththak kaLaivOnE: You attacked and pierced the huge mountain Krouncha until the demon in that mountain screamed in pain; then You blew the mountain to smithereens! kaRpuc caththip poRpuc caththi: You hold the elegant and powerful spear presented to You by PArvathi Devi, a crowning jewel of chastity, Oh Lord! kacchic cokkap perumALE.: You are the most handsome Lord residing in KAnchipuram, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | mp3 |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |