திருப்புகழ் 311 செடியுடம் பத்தி  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 311 sediyudampaththi  (kAnjeepuram)
Thiruppugazh - 311 sediyudampaththi - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
     செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
          சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம்

திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
     செனனபங் கத்துத் துக்கக டற்கண்
          திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி

குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
     குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
          குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங்

குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
     சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
          குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய்

படிதருங் கற்புக் கற்பக முக்கண்
     கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
          பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா

பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
     பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
          பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா

தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
     சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
          துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின்

சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
     துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
          சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

செடி உடம்பு அத்தித் தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டுக்
கட்டிய சட்டம்
... பாவத்துக்கு இடமான உடம்பு எலும்பால் ஆகிய வீடு.
ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம்.

சிறை திரண்டு ஒக்கத் தொக்க வினைப் பந்த விகாரம் ...
சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை
என்னும் பந்த பாசக் கலக்கம்.

திமிர துங்கத் தத்துத் திரை எற்றும் செனன பங்கத்துத் துக்க
கடல் கண் திரு(கு) குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் கரண
ஆதி குடி புகும் பொக்கப் புக்கில்
... இருண்டதும், உயர்ந்து
எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு
என்னும் துக்ககரமான கடலிடத்தே, பறிபட்டு விழுந்த தென்னங்
குரும்பை போல அலைச்சல் உற்றுச் சுழன்று (அந்தப் பிறவிக் கடலில்
மிதக்கும்) தெப்பம் போன்ற (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய)
முக்கரணங்கள் குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம்.

இறப்பின் குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில் மலத்தின்
குகை
... இறந்து போனால் (இந்த வஞ்சகக்) குடிசை வெந்து போகும்
கொட்டகை. (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களின்
இருப்பிடம்.

சுமந்து எட்டுத் திக்கிலு(ம்) முற்றும் தடுமாறும் குவலயம்
கற்றுக் கத்தி இளைக்கும் சமய சங்கத்தைத் தப்பி இருக்கும்
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய்
...
(ஆகிய இந்த உடலைச் சுமந்து) எட்டுத் திசைகளிலும், எல்லா
இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி
இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும்
(உத்தம) குணத்தை அடைந்தும், (சாந்த) குணத்திலேயே உட்பட்டு
எப்போதும் நான் பொருந்தி இருக்கும்படி கண் பார்த்து அருளுக.

படி தரும் கற்புக் கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்குத்
தர(ம்) முத்தம் பணி நிதம்பத்துச் சத்தி உகக்கும் குமரேசா
...
முறைமையான கற்பு வாய்ந்த, கற்பகம் அனையவள். முக்கண் கொண்ட
கொடி போன்றவள். பசுமையான அலங்காரத்துக்குத் தகுதியான
முத்து மாலை அணிந்தவள். பாம்பு போன்ற ஜனன உறுப்பையும்
கொண்ட தேவியாகிய உமை மகிழ்கின்ற குமரேசனே,

பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு
சித்தி அளிக்கும் பரமர் வந்திக்க தக்க பதத்தன் குரு நாதா
...
மனத்தை நிலை நிறுத்தி, (ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும்) எட்டு
எழுத்தையும், நாள் தோறும் போற்றித் துதிக்கும் அடியார்களுக்கு
வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை
உடைய குரு நாதனே,

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்தி
பட்ட குழற்கும் துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற
மானின் சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும்
நெஞ்சத்த
... கைவளை அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும்,
இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும்,
பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்த வாயிதழுக்கும், குறப்
பெண்ணாகிய வள்ளியின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும்
நெகிழ்கின்ற மனதை உடையவனே,

சுத்த இருக்கும் சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும்
பெருமாளே.
... சுத்தமாகிய ரிக்கு வேதமும் தேவர்களும் வணங்க
காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.13  pg 2.14  pg 2.15  pg 2.16  pg 2.17  pg 2.18 
 WIKI_urai Song number: 453 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 311 - sediyudam paththi (kAnjeepuram)

thanathanan thaththath thaththana thaththam
     thanathanan thaththath thaththana thaththam
          thanathanan thaththath thaththana thaththam ...... thanathAna

chediyudam paththith thetRiyi raththanj
     cheRinaram pittuk kattiya sattanj
          chiRaithiraN dokkath thokkavi naippan ...... thavikAram

thimirathung kaththath thuththirai yetRunj
     jenanapang kaththuth thukkaka daRkaN
          thirukurum paippat tucchuzhal theppang ...... karaNAthi

kudipukum pokkap pukkili Rappin
     kudilamven thokkuk kottilma laththin
          kukaisuman thettuth thikkilu mutRun ...... thadumARung

kuvalayang katRuk kaththiyi Laikkunj
     chamayasang kaththaith thappiyi rukkung
          kuNamadain thutpat tokka-i rukkum ...... padipArAy

paditharung kaRpuk kaRpaka mukkaN
     kodipasunj chithrak kuththara muththam
          paNinitham paththuc chaththiyu kakkung ...... kumarEsA

paravasang kettet takkara niththam
     paravuman parkkuc chiththiya Likkum
          paramarvan thikkath thakkapa thaththan ...... gurunAthA

thodiyidum pathmak kaikkumi daikkunj
     churuLpadum paththip pattaku zhaRkun
          thukirkadain thoppith thitta-i thazhkkung ...... kuRamAnin

sudarpadung kacchuk kattumu laikkun
     thuvaLunen jaththac chuththa-i rukkum
          surarumvan thikkak kacchiyil niRkum ...... perumALE.

......... Meaning .........

chedi udampu aththith thetRi iraththam cheRi narampu ittuk kattiya sattam: This body is the receptacle of all sins, made up of bones. This is an edifice built with blood and a closely-knit nervous system.

chiRai thiraNdu okkath thokka vinaip pantha vikAram: It is an alloy of several conflicting attachments, an admixture of several past deeds that have combined together to imprison this body.

thimira thungkath thaththuth thirai etRum jenana pangaththuth thukka kadal kaN thiru(ku) kurumpaip pattuc chuzhal theppam karaNa Athi kudi pukum pokkap pukkil: In the dark and miserable sea of birth with tall waves lashing out, this body rolls about floating like a tender coconut plucked from somewhere and thrown into a whirl-pool in the mid-sea; it is a vessel full of myths drifting away on the water (of the sea of birth) whose occupants are the four basic tenets, namely, mind, intellect, arrogance and will.

iRappin kudilam venthu okkuk kottil malaththin kukai: If life departs the (treacherous) body, it is rendered into a thatched hut that is burnt away. It is a coffer for the three basic slags, namely, haughtiness, karma and delusion.

sumanthu ettuth thikkilu(m) mutRum thadumARum kuvalayam katRuk kaththi iLaikkum chamaya sangaththaith thappi irukkum kuNam adainthu udpattu okka irukkumpadi pArAy: (Carrying the burden of this body,) roaming around in all the eight directions and faltering at all places, I have been learning the various texts of this world; although I have attained the (virtuous) state of mind that keeps me away from associating with religious zealots who weaken themselves with their shrieking fanaticism, kindly bless me to remain peacefully in a state of blissful tranquility, Oh Lord!

padi tharum kaRpuk kaRpaka mukkaN kodi pasum chithrakkuth thara(m) muththam paNi nithampaththuc chaththi ukakkum kumarEsA: She possesses immaculate chastity and is compassionate like the (wish-yielding) KaRpaga tree. She is slender like a creeper and is endowed with three eyes (namely, the sun, the moon and fire). She wears a string of greenish pearls that is worthy of adornment. She has a genital that resembles the hood of the snake. She is Mother, UmA DEvi, and is elated by You, Oh Lord KumarA!

paravasam kettu ettu akkaram niththam paravum anparkku siththi aLikkum paramar vanthikka thakka pathaththan guru nAthA: Lord SivA grants blissful liberation to those devotees who worship praising Him every day, with utmost concentration, chanting the manthrA of eight sacred letters (Om Aam Aum SivAyanama); You are the great Master of that SivA who prostrates at Your hallowed feet, Oh Lord!

thodi idum pathma kaikkum idaikkum churuLpadum paththi patta kuzhaRkum thukir kadainthu oppiththitta ithazhkkum kuRa mAnin chudar padum kacchu kattu mulaikkum thuvaLum nenjaththa: Your heart melts for the lotus-like hand of VaLLi, the damsel of the KuRavAs, that wears the bangles, her waist, the neat deck of her curly hair, her lips that have been adorned with churned coral and her dazzling bosom that wears a tight blouse, Oh Lord!

suththa irukkum surarum vanthikka kacchiyil niRkum perumALE.: You are seated in Kancheepuram, a shrine that is worshipped by the pure Rigg scripture and the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 311 sediyudam paththi - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]