திருப்புகழ் 302 வெற்றி செயவுற்ற  (திருத்தணிகை)
Thiruppugazh 302 vetRiseyavutRa  (thiruththaNigai)
Thiruppugazh - 302 vetRiseyavutRa - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்த தனதான

......... பாடல் .........

வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
     விட்டகணை பட்ட ...... விசையாலே

வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
     ரித்தொளிப ரப்பு ...... மதியாலே

பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
     பட்டதிகி ரிக்கு ...... மழியாதே

பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
     பச்சைமயி லுற்று ...... வரவேணும்

நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
     னைக்குமன மொத்த ...... கழல்வீரா

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
     நித்தமிறு கத்த ...... ழுவுமார்பா

எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
     எப்பொழுது நிற்கு ...... முருகோனே

எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
     இட்டசிறை விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து ... ஜெயமே தரவல்ல
கரும்பு வில்லின் முனையை வளைத்து

மதன் விட்டகணை பட்ட விசையாலே ... மன்மதன் செலுத்திய மலர்
அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும்,

வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில் ... வெட்டவெளியிலும்,
தெருக்களிலும், வட்டப் பறையென நின்று

கனல்விரித்தொளி பரப்பு மதியாலே ... நெருப்பை அள்ளி வீசி ஒளி
பரப்பும் நிலவினாலும்,

பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும் ... வசைமொழிகளை
விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல
மாதர்களின் ஏச்சாலும்,

இசை பட்ட திகிரிக்கும் அழியாதே ... இசையை எழுப்பும்
புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல்,

பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து ... பக்தி நெறியை
எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க

வளர் பச்சைமயிலுற்று வரவேணும் ... உயர்ந்த பச்சை மயில்
வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன்.

நெற்றிவிழி பட்டெரிய ... நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன்
எரிந்து போக,

நட்டமிடும் உத்தமர் நினைக்குமனமொத்த கழல்வீரா ... நடனம்
செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில்
பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே,

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற ... தேன்
ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற
வள்ளி அன்பு கொள்ளும்படியாக

நித்தம் இறுகத் தழுவு மார்பா ... அவளை நாள்தோறும் கெட்டியாக
அணைக்கும் மார்பனே,

எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில் ... அலை வீசும் கடல்கள்
சூழ்ந்த புவியில் திருத்தணியில்

எப்பொழுது நிற்கு முருகோனே ... எப்பொழுதும்
எழுந்தருளியிருக்கும் முருகனே,

எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர் ... அஷ்ட
குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச்
செலுத்திய அசுரர்கள்

இட்டசிறை விட்ட பெருமாளே. ... தேவர்களை அடைத்த
சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப்
பெண்களின் ஏச்சு, குழலின் இசை, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.755  pg 1.756  pg 1.757  pg 1.758 
 WIKI_urai Song number: 312 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 302 - vetRi seyavutRa (thiruththaNigai)

vetri seyavutra kazhai viR kudhai vaLaiththu madhan
     vitta kaNai patta ...... visaiyAlE

vetta veLi yitreruvil vatta paNaiyiR kanalvi
     riththoLi parappu ...... madhiyAlE

patri vasai katra pala thaththaiyar thamakkum isai
     patta thigirikkum ...... azhiyAdhE

baththiyai enakkaruLi muththiyai aLiththu vaLar
     pachchai mayil utru ...... varavENum

netri vizhi patteriya nattam idum uththamar ni
     naikku manam oththa ...... kazhal veerA

neyk kamalam okkum mulai meyk kuRavi ichchai uRa
     niththam iRugath ...... thazhuvu mArbA

etriya thiruch chaladhi sutriya thiruththaNiyil
     eppozhudhu niRku ...... murugOnE

ettachalam etta nilam muttamudi nettasurar
     itta siRai vitta ...... perumALE.

......... Meaning .........

vetri seya utra kazhai viR kudhai vaLaiththu madhan vitta kaNai patta visaiyAlE: The force of flowery arrows sent out by Manmathan (Love God) with a stretched bow of sugarcane, which ensures victory;

vetta veLi yitreruvil vatta paNaiyiR kanalviriththoLi parappu madhiyAlE: the moon looking like a round disc that emits fire, spreading light in the milky way and in the streets;

patri vasai katra pala thaththaiyar thamakkum: the scandals that are heaped on me by the women of the town who have resolutely learnt scandal-mongering as an art;

isai patta thigirkkum azhiyAdhE: and the music that emanates from the flute - all these haunt me, and I do not want to suffer any more.

baththiyai enakkaruLi muththiyai aLiththu: You have to kindly grant me devotion and my liberation

vaLar pachchai mayil utru varavENum: by arriving in front of me, mounted on Your great green-hued Peacock!

netri vizhi patteriya nattam idum uththamar: He burnt down Manmathan by the fiery eye in His forehead; He is the great Lord who performs the cosmic dance;

ninaikku manam oththa kazhal veerA: and that SivA contemplates You in His heart where You reside with Your anklets, oh brave one!

neyk kamalam okkum mulai meyk kuRavi ichchai uRa: She, the chaste damsel of the KuRavAs, with bosoms like honeyed lotus flowers, loves You;

niththam iRugath thazhuvu mArbA: and everyday You embrace that VaLLi with Your chest very tightly!

etriya thiruch chaladhi sutriya thiruththaNiyil: ThiruththaNigai, which is unique in this world surrounded by wavy oceans,

eppozhudhu niRku murugOnE: is Your permanent abode, Oh MurugA!

ettachalam etta nilam muttamudi nettasurar: Those demons who ruled the entire world, right up to their eight family mountains (including Mount Krouncha),

itta siRai vitta perumALE.: imprisoned the DEvAs, and You liberated them, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God, the flowery arrows, the scandal-mongering women and the music from the flute are some of the sources which aggravate her separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 302 vetRi seyavutRa - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]