திருப்புகழ் 299 வரிக் கலையின்  (திருத்தணிகை)
Thiruppugazh 299 varikkalaiyin  (thiruththaNigai)
Thiruppugazh - 299 varikkalaiyin - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்ததன தனதான தனத்ததன தனதான
     தனத்ததன தனதான ...... தனதான

......... பாடல் .........

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
     மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
     வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
     ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
     உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
     மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
     விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
     திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
     திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரிக்கலையி னிகரான ... வரிகளோடு கூடிய கலைமானுக்குச்
சமமான

விழிக்கடையில் இளைஞோரை ... கடைக்கண் பார்வையால்
இளைஞர்களை

மயக்கிடு மடவார்கள் மயலாலே ... மயக்கக்கூடிய பெண்களின்
மையலாலே

மதிக்குளறி யுளகாசும் ... அறிவு தடுமாறி, கையிலுள்ள பொருள்
அத்தனையும்

அவர்க்கு உதவி மிடியாகி ... அப்பெண்களுக்கே கொடுத்து
வறுமையை அடைந்து

வயிற்றிலெரி மிகமூள ... வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும்,

அதனாலே ஒருத்தருடன் உறவாகி ... அதன் காரணமாக
ஒருவருடன் நட்பாகியும்,

ஒருத்தரொடு பகையாகி ... இன்னொருவருடன் பகையாகியும்,

ஒருத்தர்தமை மிகநாடி ... வேறு ஒருவரை மிகவும் விரும்பியும்

அவரோடே உணக்கையிடு ... அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை
அடையும்

படுபாவி எனக்குனது கழல்பாட ... படுபாவியாகிய எனக்கு உன்
திருவடிகளைப் பாட

உயர்ச்சிபெறு குணசீலம் ... உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தை

அருள்வாயே ... தந்தருள்வாயாக.

விரித்து அருண கிரிநாதன் ... அருணகிரிநாதன் என்ற இந்த
அன்பன் விரிவாக

உரைத்த தமிழெனு மாலை ... கூறிய தமிழினால் ஆன இந்தத்
திருப்புகழ் மாலையை

மிகுத்தபல முடனோத மகிழ்வோனே ... நிரம்பிய ஆற்றலுடன்
பாட உள்ளம் மகிழ்பவனே,

வெடித்து அமணர் கழுவேற ... சமணர்கள் உடல் வெடித்துக்
கழுமரத்தில் ஏறவும்,

ஒருத்தி கணவனும் மீள ... ஒப்பற்ற மங்கையர்க்கரசியின்
கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும்,

விளைத்ததொரு தமிழ்பாடு ... அற்புதங்கள் விளைத்த தேவாரத்
தமிழ் மறையைப் பாடிய

புலவோனே ... ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே,

செருக்கியிடு பொருசூரர் ... ஆணவத்தோடு போர் செய்ய வந்த
சூராதி அசுரர்களின்

குலத்தையடி யறமோது ... குலத்தையே வேரோடு அழியுமாறு தாக்கிய

வடிவேலை திருக்கையினில் உடையோனே ... கூர்வேலினை
அழகிய கரத்தில் ஏந்தியவனே,

திருக்குலவும் ... அழகு குலவி விளங்குவதும்,

ஒருநீல மலர்ச்சுனையில் ... ஒப்பற்ற நீலோற்பல மலரை மலரும்
சுனையை உடையதும் ஆன

அழகான திருத்தணிகை மலைமேவு பெருமாளே. ... அழகிய
திருத்தணிகை மலை மீதுள்ள பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.749  pg 1.750  pg 1.751  pg 1.752 
 WIKI_urai Song number: 310 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 299 - varik kalaiyin (thiruththaNigai)

varikkalayi nigarAna vizhikkadaiyil iLainyOrai
     mayakkiyidu madavArgaL ...... mayalAlE

madhikkuLaRi uLakAsum avarkkudhavi midiyAgi
     vayitrileri migamULa ...... adhanAlE

oruththarudan uRavAgi oruththarodu pagaiyAgi
     oruththarthamai miganAdi ...... avarOdE

uNakkaiyidu padupAvi enakkunadhu kazhalpAda
     uyarcchipeRu guNaseelam ...... aruLvAyE

virith aruNagirinAthan uraiththathamizh enumAlai
     miguththabala mudanOdha ...... magizhvOnE

vedith amaNar kazhuvERa oruththi kaNavanumeeLa
     viLaiththadhoru thamizhpAdu ...... pulavOnE

serukkiyidu porusUrar kulaththaiyadi aRamOdhu
     thirukkaiyinil vadivElai ...... udaiyOnE

thirukkulavum oruneela malarchchunaiyil azhagAna
     thiruththaNigai malaimEvu ...... perumALE.

......... Meaning .........

varikkalayi nigarAna vizhikkadaiyil: From the corner of their eyes that resemble deer's eyes,

iLainyOrai mayakkiyidu madavArgaL mayalAlE: these girls captivate the youth;

madhikkuLaRi uLakAsum avarkkudhavi midiyAgi: and losing my sense of balance, I gave away all my belongings to those girls and became poor.

vayitrileri migamULa: That poverty lit a fire in my stomach which burned wild.

adhanAlE oruththarudan uRavAgi: Due to that fire, I became friendly with someone;

oruththarodu pagaiyAgi: I became an enemy of someone else;

oruththarthamai miganAdi: and yet again, I got over-attached to another.

avarOdE uNakkaiyidu: With all these attachments I became debilitated.

padupAvi enakkunadhu kazhalpAda: Bless this worst sinner, namely myself, to sing about Your feet

uyarcchipeRu guNaseelam aruLvAyE: by leading a lofty life with good character.

virith aruNagirinAthan uraiththathamizh enumAlai: If The Glory of God described in Tamil (this Thiruppugazh) by ArunagirinAthan (namely myself)

miguththabala mudanOdha magizhvOnE: is sung with full force, You are pleased.

vedith amaNar kazhuvERa: The camaNas (anti-saivites) were killed in the gallows (kazhumaram) and

oruththi kaNavanumeeLa: The Pandya King, husband of the unique Mangaiyarkkarasi, was redeemed from the base camaNa religion

viLaiththadhoru thamizhpAdu pulavOnE: miraculously by the Divine Hymns (DEvAram) sung in Tamil by ThirugnAna Sambandhar; and You came as that great poet!

serukkiyidu porusUrar kulaththaiyadi aRamOdhu: The haughty clan of SUran came to fight a war with You, and their entire dynasty was uprooted by the impact

thirukkaiyinil vadivElai udaiyOnE: of the sharp spear in Your lovely hand!

thirukkulavum oruneela malarchchunaiyil: In this hallowed place is a beautiful fountain which delivers every day a unique violet flower (Neelothpala flower);

azhagAna thiruththaNigai malaimEvu perumALE.: this beautiful place is known as ThiruththaNigai, and You reside on its mount, Oh, Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 299 varik kalaiyin - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]