திருப்புகழ் 295 முலைபுளகம் எழ  (திருத்தணிகை)
Thiruppugazh 295 mulaipuLagamezha  (thiruththaNigai)
Thiruppugazh - 295 mulaipuLagamezha - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதந்த தனதனன தனதந்த
     தனதனன தனதந்த ...... தனதான

......... பாடல் .........

முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
     முகிலளக மகில்பொங்க ...... அமுதான

மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
     முகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே

கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
     படவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர்

கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
     கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ

அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
     அதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள்

அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
     அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா

தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
     சடைமுடியி லணிகின்ற ...... பெருமானார்

தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
     தணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில்
அளகம் அகில் பொங்க அமுதான மொழி பதற அருமந்த
விழி குவிய
... மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில்
அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம்
போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற
மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த
கண்கள் குவிய,

மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணை ஊடே
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட
உருகி
... நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம்
உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக்
கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று
சேர உருகி,

இதயங்கள் ப்ரியமே கூர் கலவி கரை அழி இன்ப அலையில்
அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ
...
உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப
அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை
நான் அடையமாட்டேனோ?

அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட
அதிர வெடி பட அண்டம் இமையோர்கள் அபயம் என
...
அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு
நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட,
தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட,

நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட
நின்று பொரும் வேலா
... இடை நிலத்தே நின்ற அசுரர்கள்
அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று
சண்டை செய்த வேலனே,

தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை
சடை முடியில் அணிகின்ற பெருமானார் தரு குமர
...
தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம்
வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த
சிவபெருமான் அருளிய குமரனே,

விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில்
உறைகின்ற பெருமாளே.
... விஷம் கொண்ட ஐந்து தலைகளை
உடைய பாம்பு* பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* தணிகை மலையில் வாசுகியும், ஆதிசேஷனும் பூசித்ததாகத்
தணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.743  pg 1.744  pg 1.745  pg 1.746 
 WIKI_urai Song number: 307 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 295 - mulaipuLagam ezha (thiruththaNigai)

mulaipuLaka mezhaangai maruvusari vaLaikonja
     mukilaLaka makilponga ...... amuthAna

mozhipathaRa varumantha vizhikuviya mathikoNda
     mukamveyarvu peRamanRa ...... laNaiyUdE

kalainekizha vaLarvanji yidaithuvaLa vudalonRu
     padavuruki yithayangaL ...... priyamEkUr

kalavikarai yazhiyinpa alaiyilalai padukinRa
     kavalaikeda ninathanpu ...... peRuvEnO

alaiyeRiyu mezhilchaNda uthathivayi RazhalmaNda
     athiravedi padaaNda ...... mimaiyOrkaL

apayamena nadukinRa asurarpada adiyuNdu
     avarkaLmunai kedaninRu ...... porumvElA

thalaimathiya nathithumpai yiLavaRuku kamazhkonRai
     chadaimudiyi laNikinRa ...... perumAnAr

tharukumara vidavainthu thalaiyaravu thozhukinRa
     thaNimalaiyi luRaikinRa ...... perumALE.

......... Meaning .........

mulai puLakam ezha am kai maruvu vaLai konja mukil aLakam akil ponga amuthAna mozhi pathaRa arumantha vizhi kuviya: Their breasts were exhilarated; the slippery bangles on their beautiful arms made a gentle jingling sound; their cloud-like dark hair exuded an aroma of incence; their nectar-like words stuttered and trembled; their precious eyes contracted in ecstasy;

mathi koNda mukam veyarvu peRa manRal aNai UdE kalai nekizha vaLar vanji idai thuvaLa udal onRupada uruki: beads of perspiration appeared on their moon-like face; their attire came off loose on the fragrant bed; their robust waist normally looking like the rattan reed (vanji) caved in; both bodies united with each other in fusion;

ithayangaL priyamE kUr kalavi karai azhi inpa alaiyil alai padukinRa kavalai keda ninathu anpu peRuvEnO: both hearts were filled with love, and in that act of coitus, waves of bliss tossed me around; in order that my anxiety about that sort of whirl is removed, will I not obtain Your love, Oh Lord?

alai eRiyum ezhil chaNda uthathi vayiRu azhal maNda athira vedi pada aNdam imaiyOrkaL apayam ena: In the bowels of the wavy sea, fire was ignited intensely; the earth exploded with a bang; the celestials screamed seeking refuge;

nadu ninRa asurar adi uNdu avarkaL munai keda ninRu porum vElA: the demons who were caught in between were annihilated; their armies got thrashed and were destroyed as You stood steadfastly on the battlefield and fought with Your spear, Oh Lord!

thalai mathiya nathi thumpai iLa aRuku kamazh konRai sadai mudiyil aNikinRa perumAnAr tharu kumara: On His head He wears the crescent moon, river Gangai, the plant thumbai (leucas), fresh aRugam (cynodon) grass and fragrant Indian Laburnum (konRai) adorning His matted hair; and You are the son graciously delivered by that Lord SivA!

vida ainthu thalai aravu thozhukinRa thaNi malaiyil uRaikinRa perumALE.: The serpent* bearing five poisonus hoods offers worship and prostrates at the mountain in ThiruththaNigai which is Your abode, Oh Great One!


* The great serpents, vAsuki and AdhisEshan, are reported to have offered worship in ThiruththaNigai according to the stories about that place.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 295 mulaipuLagam ezha - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]