திருப்புகழ் 281 பழமை செப்பிய  (திருத்தணிகை)
Thiruppugazh 281 pazhamaiseppiya  (thiruththaNigai)
Thiruppugazh - 281 pazhamaiseppiya - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தன தத்தன தத்தன
     தனன தத்தன தத்தன தத்தன
          தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
     முறைம சக்கிய ணைத்துந கக்குறி
          படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப்

பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
     விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
          பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர்

அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
     அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
          அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை

அகில சத்தியு மெட்டுறு சித்தியு
     மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
          மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே

குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
     கரண மிட்டுந டித்தமி தப்படு
          குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன்

குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
     நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
          குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா

தழையு டுத்தகு றத்திப தத்துணை
     வருடி வட்டமு கத்தில தக்குறி
          தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே

தரள பொற்பணி கச்சுவி சித்திரு
     குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
          தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பழமை செப்பி அழைத்து இத மித்துடன் முறை மசக்கி
அணைத்து
... பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து, இன்பமும்
பொய்யும் கலந்து முறையே மயங்கச் செய்து அணைத்து,

நகக் குறி பட அழுத்தி முகத்தை முகத்து உறவாடிபதறி
எச்சிலை இட்டு மருத்து இடு
... நகக்குறி உடலில் பட அழுத்தி,
முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி, அவசரமாக எச்சில் கூடிய
மருந்தை ஊட்டி,

விரவு குத்திர வித்தை விளைப்பவர் பல விதத்திலும்
அற்பர் எனச் சொல்லும் மட மாதர்
... வஞ்சகம் கலந்த தந்திரச்
செயல்களைச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் என்று சொல்லத்
தக்க அறிவில்லாத விலைமாதர்களுடன்

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனைப் பழி உற்ற
அவத்தனை அடைவு கெட்ட புரட்டனை முட்டனை
அடியேனை
... அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன்
ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத
பொய்யனை, மூடனாகிய அடியேனை

அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது எனப் பெரு
வெட்டவெளிப்படும் அருண பொன் பதம் உற்றிட வைப்பதும்
ஒரு நாளே
... சகல சக்தியும், அஷ்டமா* சித்திகளும் எளிதில்
கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய
திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக்
கிடைக்குமா?

குழி விழிப் பெரு நெட்டு அலகைத் திரள் கரணம் இட்டு
நடித்து அமிதப்படு குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும்
ஒரு சூரன்
... குழிந்த விழிகளைக் கொண்ட, பெரிது நீண்ட பேய்க்
கூட்டங்கள் கூத்துடன் நடனமாடி, அளவில்லாத வீராவேச ஒலி செய்த
போர்க்களத்தில், எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன்

குருதி கக்கி அதிர்த்து விழப் பொரு நிசிசரப் படை பொட்டு
எழ விக்ரம குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில்
வீரா
... ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படி போர் செய்தும்,
அசுரர் சேனைகள் பொடிபட்டு அழியவும், (இந்திரனது) வலிமை
பொருந்திய வஜ்ராயுதம் போன்ற வேலாயுதத்தைச் செலுத்திய தீரனே,
பேரொலி செய்யும் மயில் வீரனே,

தழை உடுத்த குறத்தி பதத் துணை வருடி வட்ட முக(த்து)
திலதக் குறி தடவி வெற்றி கதித்த முலைக் குவடு அதன்
மீதே
... தழைகளை உடையாகக் கொண்ட குறவள்ளியின் திருவடிகள்
இரண்டை வருடியும், வட்டமாக உள்ள முகத்தில் பொட்டு
அடையாளத்தை வைத்தும், வெளித்தோன்றும் மலை போன்ற
மார்பகங்களின் மேல்,

தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி
மிகுத்திடு தணி மலைச் சிகரத்திடை உற்று அருள்
பெருமாளே.
... முத்தாலாகிய அழகிய ஆபரணங்களை, கச்சை
அணிவித்தும், இரண்டு குண்டலங்களையும் செவிகளில் இடம் பெற
வைத்தும், காதல் பெருகும் பெருமாளே, தணிகை மலை உச்சியில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.
மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.
கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.
லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.
பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).
பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.
ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.
வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.715  pg 1.716  pg 1.717  pg 1.718  pg 1.719  pg 1.720 
 WIKI_urai Song number: 296 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 281 - pazhamai cheppiya (thiruththaNigai)

pazhamai seppiya zhaiththitha miththudan
     muRaima sakkiya Naiththuna kakkuRi
          padaa zhuththimu kaththaimu kaththuRa ...... vuRavAdip

pathaRi yecchilai yittuma ruththidu
     viravu kuththira viththaivi Laippavar
          palavi thaththilu maRpare naccholu ...... madamAthar

azhitho zhiRkuvi ruppodu naththiya
     asada naippazhi yutRaa vaththanai
          adaivu kettapu rattanai muttanai ...... adiyEnai

akila saththiyu mettuRu siththiyu
     meLithe napperu vettave Lippadu
          maruNa poRpatha mutRida vaippathu ...... morunALE

kuzhivi zhipperu nettala kaiththiraL
     karaNa mittuna diththami thappadu
          kulili yittaka Laththile thirththidu ...... morucUran

kuruthi kakkiya thirththuvi zhapporu
     nisisa rappadai pottezha vikrama
          kulisa saththiyai vittaruL kercchitha ...... mayilveerA

thazhaiyu duththaku Raththipa thaththuNai
     varudi vattamu kaththila thakkuRi
          thadavi vetRika thiththamu laikkuva ...... dathanmeethE

tharaLa poRpaNi kacchuvi siththiru
     kuzhaithi ruththiya ruththimi kuththidu
          thaNima laicchika raththidai yutRaruL ...... perumALE.

......... Meaning .........

pazhamai seppi azhaiththu itha miththudan muRai masakki aNaiththu: They recall old relationship and call by that identity; they combine pleasure and falsehood and hug enticingly;

nakak kuRi pada azhuththi mukaththai mukaththu uRavAdipathaRi ecchilai ittu maruththu idu: they leave marks of finger-nails all over the body; they press their face with that of the suitor and offer, for imbibing, a potion hurriedly concocted with their saliva;

viravu kuththira viththai viLaippavar pala vithaththilum aRpar enac chollum mada mAthar: they perform many a treacherous and tricky act; these stupid whores are mean by all measures;

azhi thozhiRku viruppodu naththiya asadanaip pazhi utRa avaththanai adaivu ketta purattanai muttanai adiyEnai: I am a fool who fell willingly for their destructive acts; I am a total waste succumbing to many blemishes; I am a worthless liar and a reckless idiot;

akila saththiyum ettuRu siththiyum eLithu enap peru vettaveLippadum aruNa pon patham utRida vaippathum oru nALE: in order that I could have an easy access to all sources of power and the eight great sidhdhis*, would there be a day when I could attain Your reddish and hallowed feet that come into view in the wide milky way?

kuzhi vizhip peru nettu alakaith thiraL karaNam ittu nadiththu amithappadu kulili itta kaLaththil ethirththidum oru cUran: A large group of big devils, with hollow eyes, began to dance, making a loud noise in the battlefield to which the matchless demon SUran charged aggressively;

kuruthi kakki athirththu vizhap poru nisisarap padai pottu ezha vikrama kulisa saththiyai vittu aruL kercchitha mayil veerA: making him throw up blood and felling him with a thud, You fought and shattered the armies of the demons to pieces; You wielded the powerful spear comparable to the weapon VajrA (of IndrA), Oh Brave One! You mount the peacock that shrieks loudly, Oh valorous One!

thazhai uduththa kuRaththi pathath thuNai varudi vatta muka(ththu) thilathak kuRi thadavi vetRi kathiththa mulaik kuvadu athan meethE: She wears leaves as her robe; You caress the two hallowed feet of that VaLLi, the damsel of the KuRavAs, and adorn her round face with a mark of vermillion on her forehead; her mountain-like prominent bosom,

tharaLa pon paNi kacchu visiththu iru kuzhai thiruththi aruththi mikuththidu thaNi malais sikaraththidai utRu aruL perumALE.: is garnished with pretty jewels made of pearls, along with a nicely fitting blouse; You put on her lobes two beautiful and swinging ear-studs, and You love her profusely; You are seated on top of Mount ThiruththaNigai, Oh Great One!


* Eight Primary Siddhis (occult powers):

aNima: reducing one's body to even less than the size of an atom;
mahima: expanding one's body to an infinitely large size;
garima: becoming infinitely heavy;
laghima: becoming almost weightless;
prApti: having unrestricted access to all bodies and places;
prAkAmya: realising success everywhere;
eesatva: possessing absolute lordship;
vasitva: the power to subjugate all.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 281 pazhamai seppiya - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]