திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 273 திருட்டு நாரிகள் (திருத்தணிகை) Thiruppugazh 273 thiruttunArigaL (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் ...... வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில் இதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட ...... அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு ...... முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியில் இரக்க மாய்வரு தற்பர சிற்பர சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண ...... குருநாதா வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் ...... கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் ... திருட்டுப் பெண்கள், கூத்தாடும் உதவாக்கரைகள், வறட்டு மோடியில் நித்த(ம்) நடிப்பவர் ... பசையற்ற செருக்குடன் தினந்தோறும் நடிப்பவர்கள், சிறக்க மேனி உலுக்கி மடக்கு(ம்) கண் வலையாலே திகைத்து ... சிறப்புடன் உடலைக் குலுக்கி, அங்குமிங்கும் திருப்பும் கண்கள் வீசும் வலையால் (ஆண்களைத்) திகைப்பித்து, உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு(ம்) ... உள்ளிருக்கும் உயிரைக் கரைத்து, மனதில் இன்பத்தை ஓட விடுமாறு செய்து மயக்கத்தைத் தருகின்ற சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ ... கண்களைக் கொட்டுகின்ற காம வழியில் சிக்கும்படி அல்லாடுவேனோ? தரித்து நீறு பிதற்றிடு(ம்) பித்தனும் ... திரு நீற்றை அணிந்து, மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய* சிவபெருமானும் இதத்து மா குடிலைப் பொருள் சொற்றிடு சமர்த்த பால எனப் புகழ் பெற்றிடு முருகோனே ... இன்பத்துடன் பெரிய பிரணவப் பொருளை உபதேசிப்பாயாக, சமர்த்தனாகிய குழந்தையே என்று (உன்னைக்) கேட்கும்படியான புகழைப் பெற்ற முருகனே, சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சித் பர ... பெரும் நிபுணனே, போற்றுகின்ற (அடியார்களின்) புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம் பொருளே, அறிவுக்கு எட்டாத கடவுளே, சகத்ர யோக விதக்ஷண தெக்ஷிண குருநாதா ... பல யோகங்களுள் சிறப்புள்ள (மெளன) யோகநிலையைக் கொண்ட தக்ஷிணா மூர்த்தியான** குரு நாதனே, வெருட்டு சூரனை வெட்டி ரணப் பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு ... (தேவர்களை) விரட்டிய சூரனை சம்ஹாரம் செய்து, போரில் கொல்லப்பட்ட இடங்களில் பேய்களுக்குப் (பிணங்களை) இரையாகக் கொடுத்து, இடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீர ... (அவற்றின்) பசித் துன்பம் நீங்கி அப்பேய்கள் தித்திகு தித்து என்று குதித்து விளையாடும்படிச் செய்த வீரனே, சமர்க்கள ரத்தமும் வெகு ப்ரளயத்தினில் இரற்றி ஓட விலக்கி ... போர்க் களத்தில் ரத்தமும் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓடும்படியாக அசுரர்களை ஒழித்து, வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே ... வேலாயுதத்தைப் பாய்ச்சி (அவர்களின்) உயிரை உண்ட வீரனே, பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட ... நிறைந்த வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் தமது மனதில் மிகுந்த மகிழ்ச்சி பெறும்படியாக, வற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழு நீரின் பிணித்த போது வெடித்து ரசத் துளி கொடுக்கும் ... அவற்றின் குறுகிய, ஆனால் பிளந்திருக்கும், வாய்களில் மூன்று வேளைகளிலும், ஒப்பற்ற செங்குவளையின் கட்டுள்ள மலர்கள் இதழ் விரிந்து ரசத் துளிகளைக் கொடுக்கும் ஓடை மிகுத்த திருத்தணி பிறக்க மேவுற அத்தலம் உற்று உறை பெருமாளே. ... சுனைகள் மிகுந்துள்ள திருத்தணிகையில் விளக்கம் பொருந்த அந்தத் தலத்தை விரும்பி அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. |
* சிவபிரானை அன்பின் மிகுதியால் சுந்தரமூர்த்தி நாயனார் 'பித்தா' என்று அழைத்தார். |
** திருத்தணிகையில் சிவபெருமானுக்குக் குருநாதராக முருக வேள் யோக நிலையில் இருந்து உபதேசம் செய்தார். ஆதலால் முருகவேள் தக்ஷிணா மூர்த்தி ஆனார். சிவனே முருக வேள் ஆதலின் தனக்குத் தானே குரு மூர்த்தியாயினார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.645 pg 1.646 pg 1.647 pg 1.648 pg 1.649 pg 1.650 WIKI_urai Song number: 269 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 273 - thiruttu nArigaL (thiruththaNigai) thiruttu nArikaL pappara mattaikaL vaRattu mOdiyi niththana dippavar siRakka mEniyu lukkima dakkukaN ...... valaiyAlE thikaiththu LAvika raiththuma naththinil ithaththai yOdavi duththuma yakkidu simittu kAmavi thaththilu mutpada ...... alaivEnO tharththu neeRupi thatRidu piththanu mithaththu mAkudi laipporuL sotRidu samarththa bAlae nappukazh petRidu ...... murukOnE samapra veeNama thiththidu puththiyil irakka mAyvaru thaRpara siRpara sakathra yOkavi dhakshaNa dhekshiNa ...... gurunAthA veruttu cUranai vettira Nappeli kaLaththi lEkazhu thukkirai yittidar viduththa kULikaL thiththiku thiththena ...... viLaiyAda vithiththa veerasa markkaLa raththamu miratRi yOdave kupraLa yaththinil vilakki vElseru kittuyir mokkiya ...... maRavOnE perukka mOdusa riththidu macchamu muLaththin mAmakizh petRida vutRidu piLappu vAyidai muppozhu thaththumor ...... kazhuneerin piNiththa pOthuve diththura saththuLi kodukku mOdaimi kuththathi ruththaNi piRakka mEvuRa aththala mutRuRai ...... perumALE. ......... Meaning ......... thiruttu nArikaL pappara mattaikaL: These are thieving girls; useless and vulgar dancers; vaRattu mOdiyil niththa(m) nadippavar: they put on an act everyday with meaningless arrogance; siRakka mEni ulukki madakku(m) kaN valaiyAlE thikaiththu: they move their bodies stimulatingly and stun the men ensnaring them with the net of their eyes which constantly shift hither and thither; uL Avi karaiththu manaththinil ithaththai Oda viduththu mayakkidu(m): they melt the inner life by flooding the heart with a flow of delusory bliss; simittu kAma vithaththilum utpada alaivEnO: will I ever roam about in such a way as to be grabbed within the lustful web of their winking eyelids? thariththu neeRu pithatRidu(m) piththanum: Lord SivA, who wears the holy ash and who is known as the crazy* one prattling VEdic utterings, ithaththu mA kudilaip poruL sotRidu samarththa bAla enap pukazh petRidu murukOnE: requested You saying "Kindly teach me the significance of the great PraNava ManthrA, my clever child!" - You enjoy that unique reputation, Oh MurugA! samapraveeNa mathiththidu puththiyil irakkamAy varu thaRpara sith para: Oh Great Expert, You are the supreme substance that materialises kindly in the intellect of those devotees who praise You! You are the Lord who is beyond anyone's comprehension! sakathra yOka vidhakshaNa dhekshiNa GurunAthA: Among all the yOgAs the best one is Mouna yOgA (speechless tranquility); and You are in that state as the great DhakshiNAmUrthy**, Oh Great Master! veruttu cUranai vetti raNap peli kaLaththilE kazhuthukku irai ittu: You destroyed the demon SUran who harassed the celestials; in the battlefield, wherever killing took place, You offered the flesh of the corpses to the devils to devour; idar viduththa kULikaL thiththiku thiththena viLaiyAda vithiththa veera: thus You satisfied the devils' hunger and made them dance in joy to the meter of "thiththiku thiththu", Oh valorous One! samarkkaLa raththamum veku praLayaththinil iratRi Oda vilakki: When the demons were killed, blood in the battlefield gushed like flood during a deluge with a loud noise vEl serukiddu uyir mokkiya maRavOnE: as You thrust the spear into the demons gulping down their life, Oh mighty one! perukkamOdu sariththidu macchamum uLaththin mA makizh petRida: The well-grown fish living in the pond are delighted to be fed vatRidu piLappu vAyidai muppozhuthaththum or kazhu neerin piNiththa pOthu vediththu rasath thuLi kodukkum: into their narrow but split-open mouths, three times a day, delicious drops drip from the breaking open of compact buds of matchless red lily flowers; Odai mikuththa thiruththaNi piRakka mEvuRa aththalam utRu uRai perumALE.: such ponds abound in this place, ThiruththaNigai, where You are distinctly seated with relish, Oh Great One! |
* Lord SivA was addressed as the crazy one by SundharamUrthy NAyanAr out of extreme devotion and friendship. |
In ThiruththaNigai, Murugan, the Master, preached to Lord SivA, sitting in the yOgA posture. Thus Murugan Himself became Lord DhakshiNAmUrthy; as SivA and Murugan are one and the same, He became His own Master. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |