திருப்புகழ் 268 கொந்துவார் குரவடி  (திருத்தணிகை)
Thiruppugazh 268 kondhuvArkuravadi  (thiruththaNigai)
Thiruppugazh - 268 kondhuvArkuravadi - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்து தானன தனதன தனதன
     தந்து தானன தனதன தனதன
          தந்து தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கொந்து வார்குர வடியினு மடியவர்
     சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
          கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா

கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
     செந்தில் காவல தணிகையி லிணையிலி
          கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
     சந்தி யாதது தனதென வருமொரு
          சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்

சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
     கிண்கி ணீமுக விதபத யுகமலர்
          தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே

சிந்து வாரமு மிதழியு மிளநவ
     சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
          செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே

செண்ப காடவி யினுமித ணினுமுயர்
     சந்த னாடவி யினுமுறை குறமகள்
          செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
     குங்கு மாசல யுகளமு மதுரித
          இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம

இந்த்ர கோபமு மரகத வடிவமு
     மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
          மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொந்துவார் குரவடியினும் ... பூங்கொத்துக்களால் நிறைந்த
குராமரத்து* அடியிலும்,

அடியவர் சிந்தை வாரிஜ நடுவினும் ... அடியார்களின் இதயத்
தாமரையின் நடுவிலும்,

நெறிபல கொண்ட வேதநன் முடியினும் ... பல நெறிகளைக்
கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும்,

மருவிய குருநாதா ... விளங்குகின்ற குருநாதனே,

கொங்கி லேர்தரு பழநியில் அறுமுக ... கொங்கு நாட்டில் அழகு
நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே,

செந்தில் காவல ... திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே,

தணிகையி லிணையிலி ... திருத்தணிகையில் இணையில்லாதவனாக
விளங்குபவனே,

கொந்து காவென மொழிதர வரு ... கூட்டமாக இரைச்சலுடன்
தர்க்கித்து வருகின்ற,

சமயவிரோத தந்த்ரவாதிகள் ... அநேக யுக்திகளைக்கொண்டு
கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால்

பெறவரியது ... பெறுவதற்கு அரிதானதும்,

பிறர் சந்தியாதது ... அன்னியர்களால் சந்திக்க முடியாததும்,

தனதென வருமொரு சம்ப்ர தாயமும் ... தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற
பரம்பரையாக வருவதும்,

இதுவென வுரைசெய்து ... இதுவே என்று எனக்கு உபதேசித்து,

விரைநீப ... வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும்,

சஞ்சரீகரிகரம் முரல் ... வண்டினம் ஒலிப்பதும்,

தமனிய கிண்கிணீமுக ... பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத்
தரித்ததுமான,

இதபத யுகமலர் தந்த ... சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத்
தந்த

பேரருள் கனவிலு நனவிலு மறவேனே ... பெரிய கிருபையை
கனவிலும் நனவிலும் மறவேன்.

சிந்து ஆரமும் இதழியும் ... நதியையும் (கங்கை), ஆத்திமலரையும்,
கொன்றையையும்,

இளநவ சந்த்ர ரேகையும் ... இளமையும் புதுமையும் உடைய
பிறைச்சந்திரனையும்,

அரவமும் அணிதரு ... பாம்பையும் தரித்துள்ள

செஞ் சடாதரர் ... சிவந்த சடையுடைய சிவபெருமானது

திருமக வெனவரு முருகோனே ... அழகிய குழந்தையாக அவதரித்த
முருகனே,

செண்பக அடவியினும் இதணினும் ... செண்பகமரங்கள் நிறை
வனத்திலும், பரண்மீதும்,

உயர் சந்தனஅடவியினும் உறை ... உயரமான சந்தன மரக்
காட்டிலும் வாசம் செய்த

குறமகள் செம்பொன் நூபுர ... குறமகள் வள்ளியின் செம்பொன்
சிலம்பை அணிந்த

கமலமும் ... தாமரை போன்ற பாதங்களையும்,

வளையணி புது வேயும் ... வளையல் அணிந்த இளம் மூங்கில்
போன்ற கரங்களையும்,

இந்து வாண்முக வனசமும் ... சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத்
தாமரையையும்,

ம்ருகமத குங்கு மாசல யுகளமும் ... கஸ்தூரியும் குங்குமமும் தரித்த
மார்பையும்,

மதுரித இந்தள அம்ருத வசனமும் முறுவலும் ... இனிமையான
யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும்,
இளநகையையும்,

அபிராம இந்த்ர கோபமும் ... வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற
சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும்,

மரகத வடிவமும் ... மரகதப் பச்சை வடிவத்தையும்,

இந்த்ர சாபமும் ... வானவில் போன்ற புருவங்களையும்,

இருகுழை யொடுபொரும் இந்த்ர நீலமும் ... இரு
குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின்
நீலமணிகளையும்,

மடலிடை யெழுதிய பெருமாளே. ... மடல் ஏட்டில்** எழுதி
வர்ணித்த பெருமாளே.


* குராமரம்:

முருகன் விரும்பி அமரும் மரம். திருவிடைக்கழி என்ற தலத்தில்
குராமரத்தின் கீழே முருகன் வீற்றிருக்கிறான்.


** மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்
ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு
பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்
தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய
மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.699  pg 1.700  pg 1.701  pg 1.702 
 WIKI_urai Song number: 289 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
The Kaumaram Team
கௌமாரம் குழுவினர்

The Kaumaram Team
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 268 - kondhuvAr kuravadi (thiruththaNigai)

kondhuvAr kura vadiyinum adiyavar
     chindhai vArija naduvinu neRipala
          konda vEdha nan mudiyinu maruviya ...... gurunAthA

kongil Ertharu pazhaniyil aRumuga
     sendhil kAvala thaNigaiyil iNaiyili
          kondhu kAvena mozhithara varu samaya ...... virOdha

thanthra vAdhigaL peRa ariyadhu piRar
     sandhiyAdhadhu thanadhena varum oru
          sampradhAyamum idhu ena urai seydhu ...... viraineepa

sanchareekari kara mural dhamaniya
     kiN kiNee muka idha padhayuga malar
          thandha pEr aruL kanavilum nanavilum ...... maravEnE

sindhu vAramum idhazhiyum iLa nava
     chandhra rEkaiyum aravamum aNi tharu
          senchadAdharar thirumaga venavarum ...... murugOnE

seNpa gAdavi yiNum idhaNinum uyar
     sandha nAdavi yinum uRai kuRamagaL
          sempo nUpura kamalamum vaLai aNi ...... pudhu vEyum

indhu vAN muka vanajamum mrigamadha
     kungu mAchala yugaLamum madhuritha
          indhaLAmrutha vachanamum muRuvalum ...... abirAmA

indhra gOpamum marakatha vadivamum
     indhra chApamum irukuzhaiyodu porum
          indhra neelamum madal idai ezhudhiya ...... perumALE.

......... Meaning .........

kondhuvAr kura vadiyinum: Under the KurA tree* (in Thiruvidaikkazhi) full of bunches of flowers,

adiyavar chindhai vArija naduvinum: in the middle of the lotus hearts of Your devotees, and

neRipala konda vEdha nan mudiyinum: at the apex of the multi-disciplined VEdAs (scriptures),

maruviya gurunAthA: You prevail, Oh Great Master!

kongil Ertharu pazhaniyil aRumuga: In Pazhani of Kongunadu, You appear as the six-faced Shanmukha;

sendhil kAvala: in ThiruchchendhUr, You appear as the Protector; and

thaNigaiyil iNaiyili: in ThiruththaNigai, You are simply peerless!

kondhu kAvena mozhithara varu samaya virOdha: Those, gathering in a noisy crowd, opposing religion

thanthra vAdhigaL peRa ariyadhu: and being argumentative, can never realize You!

piRar sandhiyAdhadhu: Those who are outside Your Domain can never meet You!

thanadhena varum oru sampradhAyamum: Your path is of a unique tradition;

idhu ena urai seydhu: and that path must be shown to me by You!

viraineepa: Adorned by fragrant kadampa flowers,

sanchareekari kara mural: with beetles humming around, and

dhamaniya kiN kiNee muka: with anklets fitted with golden beads,

idha padhayuga malar: are Your two soothing lotus feet;

thandha pEr aruL kanavilum nanavilum maravEnE: and Your great gracious gift of these feet to me can never be forgotten by me even in my dreams!

sindhu vAramum idhazhiyum: With the river (Ganga), Aththi (mountain ebony) flower, kondRai (Indian laburnum) flower,

iLa nava chandhra rEkaiyum aravamum: young and fresh crescent moon and a snake

aNi tharu senchadAdharar: adorning the reddish tresses of SivA,

thirumaga venavarum murugOnE: He gave You unto us as His lovely child, Oh MurugA!

seNpa gAdavi yiNum idhaNinum: In the forest of SheNpaka trees, on the raised platform in millet fields,

uyar sandha nAdavi yinum: and in the thick jungle of tall sandalwood trees

uRai kuRamagaL: lives the damsel of KuRavas, namely VaLLi.

sempo nUpura kamalamum: Her lotus feet wearing the reddish-golden anklets;

vaLai aNi pudhu vEyum: Her bangled hands which are soft as fresh bamboo;

indhu vAN muka vanajamum: Her moon-like bright lotus-face;

mrigamadha kungu mAchala yugaLamum: Her chest, fragrant with kasthUri (musk) and vermillion;

madhuritha indhaLAmrutha vachanamum muRuvalum: Her sweet voice like veena and smile like nectar;

abirAmA indhra gOpamum: Her enchanting lips, red like the insect IndragOpam;

marakatha vadivamum: Her complexion like green emerald;

indhra chApamum: Her brows like the rainbow; and

irukuzhaiyodu porum indhra neelamum: the blue pupils of Her wide eyes running upto her ears as if to fight with the studs -

madal idai ezhudhiya perumALE.: all these, You portrayed in madal* (canvas in palm leaf), Oh Great One!


* madal: is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 268 kondhuvAr kuravadi - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]