திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 263 குருவி என (திருத்தணிகை) Thiruppugazh 263 kuruviena (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான ......... பாடல் ......... குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி ...... யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர் கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் ...... நகையாமல் மருவு புயத்திடை பணிக ளணப்பல கரிப ரிசுற்றிட கலைகள் தரித்தொரு மதன சரக்கென கனக பலக்குட ...... னதுதேடேன் வரிய பதத்தினி னருவி யிருப்பிடம் அமையு மெனக்கிட முனது பதச்சரண் மருவு திருப்புக ழருள எனக்கினி ...... யருள்வாயே விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம் வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா அரிய திரிப்புர மெரிய விழித்தவன் அயனை முடித்தலை யரியு மழுக்கையன் அகில மனைத்தையு முயிரு மளித்தவ ...... னருள்சேயே அமண ருடற்கெட வசியி லழுத்திவி ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குருவி எனப் பல கழுகு நரித் திரள் அரிய வனத்து இடை மிருகம் எனப் புழு குறவை எனக் கரி மரமும் எனத் திரி உறவு ஆகா ... குருவி போலவும், பல கழுகுகள் நரிகள் கூட்டம் போலவும், அரிய காட்டில் உள்ள விலங்குகள் போலவும், புழு, குறவை மீன் போலவும், யானை போலவும், மரம் போலவும் திரிபவர்களுடைய நட்பு கூடாது. குமரி கலித் துறை முழுகி மனத்துயர் கொடுமை எனப் பிணி கலகமிட ... குமரிப் பெண்களால் வரும் மனக் கவலை தரும் செயல்களில் படிந்து, மனத்துயரும் கொடுமைகளும் நோய்களும் வருத்த, திரி குலையன் எனப் புலை கலியன் எனப் பலர் நகையாமல் ... அலைந்து திரிகின்ற நிலை கெட்டவன் இவன் என்றும், இழிவானவன், தரித்திரன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிகாசம் செய்யாமல், மருவு புயத்து இடை பணிகள் அ(ண்)ணப் பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ... பொருந்திய தோள்களில் அணிகலன்கள் நெருங்கி விளங்கவும், பல யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர, பட்டு ஆடைகளை உடுத்தி, ஒரு மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன் ... ஒப்பற்ற மன்மதனின் வியாபாரப் பண்டம் இவன் என்று (கண்டோர் வியக்க), பொன்னாலாகிய பல்லக்கில் செல்லும் பெருமையை நான் தேட மாட்டேன். வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பதச் சரண் ... இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே ... (ஆதலால் அத்திருவடியைச்) சேருதற்குரிய திருப்புகழ் பாக்களை நான் பாட எனக்கு அருள் புரிவாயாக. விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனக் குகு என வெகு தாளம்வெருவ முகிழ்த்து ... வெற்றி முழக்கமாக, தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி விகிர்த டடுட்டுடு ரிரிரி எனவும், குகு என்றும் பல தாளங்கள் அச்சம் தரும்படியாக ஒலித்து, இசை உரகன் முடித் தலை நெறு நெறு என ... புகழ் பெற்ற ஆதிசேஷனுடைய மணிமுடித் தலைகள் நெறுநெறு என்று இடிபட, திசை அதிர அடைத்திட மிகுதி கெடப் பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா ... திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி அடைபட, தங்கள் கூட்டம் அழியும்படி சண்டை செய்த அசுரர்கள் சிதறுண்டு முறிய செலுத்திய வேலனே, அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடித் தலை உரியும் மழுக் கையன் ... அரிய திரி புரங்கள் எரிந்து விழ (நெற்றிக் கண்ணால்) விழித்தவனும், பிரமனது முடித்தலையை அரிந்த மழுவை ஏந்திய கையை உடையவனும், அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள்சேயே ... எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவனுமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு ... (திருஞான சம்பந்தராக வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில் ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன் அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே. ... அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.685 pg 1.686 pg 1.687 pg 1.688 pg 1.689 pg 1.690 WIKI_urai Song number: 285 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 263 - kuruvi ena (thiruththaNigai) kuruvi yenappala kazhuku nariththiraL ariya vanaththidai miruka menappuzhu kuRavai yenakkari maramu menaththiri ...... yuRavAkA kumari kaliththuRai muzhuki manaththuyar kodumai yenappiNi kalaka midaththiri kulaiya nenappulai kaliya nenappalar ...... nakaiyAmal maruvu puyaththidai paNika LaNappala karipa risutRida kalaikaL thariththoru mathana sarakkena kanaka palakkuda ...... nathuthEdEn variya pathaththini naruvi yiruppidam amaiyu menakkida munathu pathaccharaN maruvu thiruppuka zharuLa enakkini ...... yaruLvAyE viruthu thanaththana thanana thanaththana vithami thimiththimi thimitha thimiththimi vikirtha daduttudu ririri yenakkuku ...... vekuthALam veruva mukizhththisai yurakan mudiththalai neRune Renaththisai yathira adaiththida mikuthi kedapporu asurar theRiththida ...... vidumvElA ariya thirippura meriya vizhiththavan ayanai mudiththalai yariyu mazhukkaiyan akila manaiththaiyu muyiru maLiththava ...... naruLsEyE amaNa rudaRkeda vasiyi lazhuththivi Namarar koduththidu marivai kuRaththiyo dazhaku thiruththaNi malaiyil nadiththaruL ...... perumALE. ......... Meaning ......... kuruvi enap pala kazhuku narith thiraL ariya vanaththu idai mirukam enap puzhu kuRavari enak kari maramum enath thiri uRavu AkA: It is forbidden to have friendship with people who wander like bunches of sparrows and eagles, like herds of jackals and wild animals roaming about in the rare jungles, are like worms and kuravai fish, and like elephants and like trees. kumari kalith thuRai muzhuki manaththuyar kodumai enap piNi kalakamida: "This fellow has indulged in several miserable actions provoked by young women and is tormented by mental distress, agony and diseases; thiri kulaiyan enap pulai kaliyan enap palar nakaiyAmal: he is an unstable wanderer, dishonourable and poverty-stricken" - without being thus ridiculed by many people; kindly save me from such humiliation; maruvu puyaththu idai paNikaL a(N)Nap pala kari pari sutRida kalaikaL thariththu oru mathanasarakku ena kanaka palakkudan athu thEdEn: I do not seek the glamour of riding in a golden palanquin, displaying densely-packed jewellery on my shoulders, surrounded by many elephants and horses, wearing silk clothes and being admired by suitors comparing me to the sales merchandise of the God of Love, Manmathan; variya pathaththinin aruvi iruppidam amaiyum enakku idam unathu pathac charaN: my ultimate refuge is bound to be Your hallowed lotus feet, being the fountain wherefrom words for my musical poems spring; maruvu thiruppukazh aruLa enakku ini aruLvAyE: (therefore, in order for me) to attain those feet, kindly bless me with the ability to sing songs of Your Glory, Oh Lord! viruthu thanaththana thanana thanaththana vithami thimiththimi thimitha thimiththimi vikirtha daduttudu ririri enak kuku ena veku thALam veruva mukizhththu: Loudly proclaiming Your victory, many beats reverberated in a scary way to the meter of "thanaththana thanana thanaththana vithami thimiththimi thimitha thimiththimi vikirtha daduttudu ririri" and "gugu"; isai urakan mudith thalai neRu neRu ena: the crown-hoods of the famous serpent AdhisEshan were smashed with a crushing noise; thisai athira adaiththida mikuthi kedap poru asurar theRiththida vidum vElA: the cardinal directions were jolted and holed in a crowded barricade; the demons who fought till the very end were knocked down by the spear You wielded, Oh Lord! ariya thirippuram eriya vizhiththavan ayanai mudith thalai uriyum mazhuk kaiyan: He frowned on them with His fiery third eye burning down the rare Thiripurams; He holds the weapon mazhu (pick-axe) in His hand which severed one of the heads of BrahmA; akilam anaiththriyum uyirum aLiththavan aruLsEyE: He is the One who protects all the worlds and all lives; You are the child of that Lord SivA! amaNar udal keda vasiyil azhuththi viN amarar koduththidum arivai kuRaththiyodu: (Coming as ThirugnAna Sambandhar) You ensured that the ChamaNas were destroyed by sending them to the gallows; along with DEvayAnai, the pretty lass reared with affection by the celestials and VaLLi, the damsel of the KuRavAs, azhaku thiruththaNi malaiyil nadiththu aruL perumALE.: You settled down in the beautiful mountain of ThiruththaNigai, where You dance, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |