திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 256 கலை மடவார்தம் (திருத்தணிகை) Thiruppugazh 256 kalaimadavArtham (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் ...... தனதான ......... பாடல் ......... கலைமட வார்தஞ் சிலையத னாலுங் கனவளை யாலுங் ...... கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயங் கருதலை யாலுஞ் ...... சிலையாலுங் கொலைதரு காமன் பலகணை யாலுங் கொடியிடை யாள்நின் ...... றழியாதே குரவணி நீடும் புயமணி நீபங் குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் ...... தொழும்வேலா தினைவன மானுங் கநவன மானுஞ் செறிவுடன் மேவுந் ...... திருமார்பா தலமகள் மீதெண் புலவரு லாவுந் தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா தனியவர் கூருந் தனிகெட நாளுந் தனிமயி லேறும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கலைமடவார்தம் ... மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் சிலையதனாலும் ... வசைப்பேச்சின் ஒலியினாலும், கனவளையாலும் ... பெருத்த சங்கின் பேரொலியினாலும், கரைமேலே ... கரையின் மேல் இருந்து கூவுகின்ற கருகிய காளம் ... மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், பெருகிய தோயம் ... பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், கருது அலையாலும் ... சிந்தனை அலைகளாலும், சிலையாலுங் கொலைதரு காமன் ... கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் பலகணையாலும் ... வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், கொடியிடையாள் ... கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி நின்றழியாதே ... உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், குரவணி நீடும் புயம் அணி ... குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள நீபங் குளிர்தொடை ... கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீதந்து அருள்வாயே ... நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. சிலைமகள் நாயன் ... மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், கலைமகள் நாயன் ... கலைமகள் சரஸ்வதியின் நாயகன் பிரம்மனும், திருமகள் நாயன் ... லக்ஷ்மியின் நாயகன் திருமாலும் தொழும்வேலா ... வணங்கி வழிபடுகின்ற* வேலாயுதனே, தினைவன மானும் ... தினைப் புனத்திலே காவல் காத்த மான் போன்ற வள்ளியும், கநவன மானும் ... விண்ணுலகில் மேன்மையான கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையும் செறிவுடன் மேவும் திருமார்பா ... மனம் நிறைந்து அணைக்கும் திருமார்பினனே, தலமகள் மீது எண் புலவர் உலாவும் ... நிலமகளாகிய இவ்வுலகின் மீது மதிப்பிற்குரிய புலவர்கள் உலாவும் தணிகையில் வாழ்செங்கதிர்வேலா ... திருத்தணிகையில் வாழும் ஒளி படைத்த வேலினை உடையவனே, தனியவர் கூருந் தனிகெட ... உலக பாசத்தை நீக்கிய உன் அடியார்களின் மிக்க தனிமை நீக்கி அருளி, நாளுந் தனிமயிலேறும் பெருமாளே. ... நாள்தோறும் ஒப்பற்ற மயிலின் மீது எழுந்தருளும் பெருமாளே. |
* திருத்தணிகையில் மும்மூர்த்திகளும் வழிபாடு செய்த வரலாறு உண்டு. தணிகைக்கு அருகே ஓடும் நந்தி ஆற்றின் வடகரையில் சிவ சந்நிதியும், தாரகாசுரன் விஷ்ணுவிடமிருந்து கவர்ந்த சக்ராயுதத்தை மீட்டுக் கொடுத்த முருகனை, திருமால் வழிபட்ட விஷ்ணுதீர்த்தம் கோயிலுக்கு மேற்கேயும், சிருஷ்டித் தொழிலில் முருகனிடம் தேர்ச்சி பெற்ற பிரம்மனுக்கான பிரம்மச்சுனை மலை ஏறும் வழியிலும் உள்ளன. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது. ஊர்ப் பெண்களின் ஏச்சு, கடல், அலைகள், குயிலோசை, சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.623 pg 1.624 pg 1.625 pg 1.626 pg 1.627 pg 1.628 WIKI_urai Song number: 261 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 256 - kalai madavArtham (thiruththaNigai) kalai madavArtham silai adhanAlung gana vaLaiyAlum ...... karai mElE karugiya kALam perugiya thOyam karudhalaiyAlum ...... silaiyAlum kolaitharu kAman pala kaNaiyAlum kodi idaiyAL nin ...... drazhiyAdhE kuravaNi needum buyamaNi neepang kuLir thodai nee than ...... dharuLvAyE silai magaL nAyan kalaimagal nAyan thirumagaL nAyan ...... thozhum vElA thinai vana mAnum ganavana mAnum seRivudan mEvum ...... thirumArbA thalamagaL meedheN pulavar ulAvum thaNigaiyil vAzh seng ...... kadhir vElA thaniyavar kUrum thanikeda nALum thani mayil ERum ...... perumALE. ......... Meaning ......... kalai madavArtham silai adhanAlum: The noise from the bejewelled gossip-mongering women; gana vaLaiyAlum: the loud monotone from the large conchshell (shanku); karai mElE karugiya kALam: the piercing cooing of the black cuckoo from the shore, sounding like the heckling voice of Love God; perugiya thOyam: the ceaseless noise from the vast sea; karudhalaiyAlum: the inner sound of the thought-waves; silaiyAlum kolaitharu kAman pala kaNaiyAlum: and the flowery arrows shot by Manmathan (Love God) who is determined to kill her with his sugarcane bow; kodi idaiyAL nin drazhiyAdhE: are all destroying this damsel with a creeper-like thin waist who is grief-stricken being separated from You. kuravaNi needum buyamaNi: You are wearing on Your shoulders, decorated with kurA flowers, neepang kuLir thodai nee than dharuLvAyE: cool garlands of kadappa flowers; and will You not give her one of those garlands graciously? silai magaL nAyan kalaimagal nAyan: SivA, the consort of PArvathi, BrahmA, the consort of Saraswathi, thirumagaL nAyan: and Vishnu, the consort of Lakshmi, thozhum vElA: have all prostrated before You, VElA.* thinai vana mAnum: VaLLi, the deer-like damsel guarding the millet field, ganavana mAnum: and DEvayAnai, the damsel who grew up in the KaRpaga Forest in heaven, seRivudan mEvum thirumArbA: are both embracing You lovingly, Oh hallow-chested One! thalamagaL meedheN pulavar ulAvum: The world's respected poets are concentrated in thaNigaiyil vAzh seng kadhir vElA: ThiruththaNigai, which is Your abode, Oh holder of the bright spear! thaniyavar kUrum thanikeda: To do away with the loneliness of Your devotees who have renounced worldly bondage, nALum thani mayil ERum perumALE.: You mount Your unique peacock everyday, Oh Great One! |
* There are indications that the Trinity prostrated before Murugan at ThiruththaNigai. On the north bank of the nearby river Nandi, there is a shrine for SivA. Vishnu's chakrA weapon that was forcibly taken by ThAraka asuran was redeemed by Murugan as evidenced by Vishnu Theerththam to the west of the temple. Brahma Fountain is half way up the mountain where BrahmA took lessons on creation from Murugan. |
This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The scandal-mongering women, the sea, the waves, the moon, the cuckoo, Love God and the flowery arrows are some of the sources which aggravate her agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |