திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 254 கடற்செகத் தடக்கி (திருத்தணிகை) Thiruppugazh 254 kadaRsegaththadakki (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான ......... பாடல் ......... கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக் கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக் கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக் கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத் தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத் தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித் தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச் சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும் பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப் பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன் பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப் பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணைக் கடைக் க(ண்)ணில் கொடுத்து அழைத்து இயல் காமக் கலைக் கதற உரைத்து ... கடலையும் உலகையும் தம் கீழ் அடங்கும்படியாக அடக்கி, தம்மை நாடி வந்தவர்களுக்கு துன்பத்தை தமது கடைக் கண்ணால் கொடுத்து, அவர்களை அழைத்து மன்மத காம நூல்களை உரக்க எடுத்துச் சொல்லி, புட் குரல்கள் விட்டு உ(ள்)ளத்தினைக் கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணைமீதே சடக்கெனப் புகத் தனத்து அணைத்து இதழ்க் கொடுத்து முத்தம் இட்டு ... தொண்டையில் வேறு வேறு புட்குரல்களைக் காட்டி, மனதைக் கரைத்து, உடுத்துள்ள பட்டுப் புடவையை அவிழ்த்துப் படுக்கை மேல் வேகமாகச் சேர்ந்து, மார்பகத்தின் மீது அணைத்து, இதழூறலை அளித்து முத்தம் தந்து, இருள் குழல் பிணித்து உகிர் ரேகை சளப்படப் புதைத்து அடித்து இலைக் குணக் கடித்தடத் தலத்தில் வைப்பவர்க்கு இதப் படுவேனோ ... கரிய கூந்தலைக் கட்டி முடித்து, நகக் குறியை மூர்க்கத்துடன் புதைய அழுத்தி, அரச இலை போன்ற பெண்குறியில் (வந்தவர்களைச்) சேர்ப்பவர்களுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இருப்பேனோ? இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினைக் கிரிப் புறத்து உறைவேலா ... ஐம்புலன்களின் சேட்டை முதலான முரண்களை அடக்கும் சத்திய வாசகப் பொருளைக் கொண்ட உனது திருப் புகழுக்கு உயிர் நிலை போன்ற பெரிய பலத்தைத் தந்து, அழகிய தினைப்புனம் உள்ள வள்ளி மலையில் வீற்றிருக்கும் வேலனே, இகல் செருக்கு அரக்கரைத் தகர்த்து ஒலித்து உரத்த பச்ச இறைச்சியைப் பசித்த இரைக்கு இசை கூவும் பெடைத் திரட்கு அளித்த குக்குடக் கொடி கரத்த ... போரில் கர்வத்துடன் வந்த அசுரர்களை அழித்து, ஒலியுடன் மிகப் பச்சையான மாமிசத்தை பசியுடன் இரை வேண்டும் என்று கேட்கும் குரலுடன் கூவுகின்ற பெட்டைக் கோழிக் கூட்டங்களுக்குக் கொடுத்த, சேவல் கொடியை கையில் ஏந்தியவனே, பொய்ப் பிதற்றல் அறப் படுத்து சற் குருவாய் முன் பிறப்பிலிக்கு உணர்த்து சித்த ... பொய்யான பிதற்றல் மொழிகளை அறவே களைந்து, குருநாதராக வந்து முன்பு ஒரு நாள் பிறப்பு இல்லாத சிவபெருமானுக்கு போதித்த சித்த மூர்த்தியே, உற்ற நெல் பெருக் குவைப் பெருக்கு மெய்த் திருத்தணிப் பெருமாளே. ... நெல்லின் பெரிய குவியல்களை மேலும் பெருக வைக்கும் உண்மை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.607 pg 1.608 pg 1.609 pg 1.610 WIKI_urai Song number: 253 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 254 - kadaRsegath thadakki (thiruththaNigai) kadaRchekath thadakkimat Raduththavark kidukkaNaik kadaikkaNiR koduththazhaith ...... thiyalkAmak kalaikkathat Ruraiththuput kuraRkaLvit tuLaththinaik karaiththuduth thapattavizhth ...... thaNaimeethE sadakkenap pukaththanath thaNaiththithazhk koduththumuth thamittirut kuzhaRpiNith ...... thukirEkai saLappadap puthaiththadith thilaikkuNak kadiththadath thalaththilvaip pavarkkithap ...... paduvEnO idakkadak kumeypporut tiruppukazhk kuyirppaLith thezhitRinaik kirippuRath ...... thuRaivElA ikaRcheruk karakkaraith thakarththolith thuraththapac chiRaicchiyaip pasiththiraik ...... kisaikUvum pedaiththirat kaLiththakuk kudakkodik karaththapoyp pithatRaRap paduththusaR ...... guruvAymun piRappilik kuNarththusith thavutRaneR perukkuvaip perukkumeyth thiruththaNip ...... perumALE. ......... Meaning ......... kadal chekaththu adakki matRu aduththavarkku idukkaNaik kadaik ka(N)Nil koduththu azhaiththu iyal kAmak kalaik kathaRa uraiththu: They are capable of controlling all the seas and the world under them. They cause grief to their suitors by their mere glance from the corner of the eyes. They beckon them and narrate loudly the text of erotica written by Manmathan (God of Love). put kuralkaL vittu u(L)Laththinaik karaiththu uduththa pattu avizhththu aNaimeethE sadakkenap pukath thanaththu aNaiththu ithazhk koduththu muththam ittu: Various cooings of birds emanate from their throat with which they melt their suitors' heart. They loosen the silk saree wrapped around them, rush to the bed and hug their suitors firmly with their bosom, offering kisses and saliva from their lips. iruL kuzhal piNiththu ukir rEkai saLappadap puthaiththu adiththu ilaik kuNak kadiththadath thalaththil vaippavarkku ithap paduvEnO: They tie their dark and loosened hair into a tuft, etch nail-marks fiercely and deeply and forcibly lead (their suitors) to their genitals looking like the pipal leaf. Am I supposed to carry on seeking carnal pleasure from these whores indefinitely? idakku adakku meypporuL thiruppukazhkku uyirppu aLiththu ezhil thinaik kirip puRaththu uRaivElA: Your glory has the True Significance of controlling the conflicts caused by the mischiefs played by the five sensory organs, and granting to that glory the great life-power, You are seated in VaLLimalai, which has a beautiful field of millet, Oh Lord with the spear! ikal serukku arakkaraith thakarththu oliththu uraththa paccha iRaicchiyaip pasiththa iraikku isai kUvum pedaith thiratku aLiththa kukkudak kodi karaththa: The arrogant demons who came to the battlefield were all destroyed, and You distributed their fresh flesh hungrily sought after by the clamouring hens, Oh Lord with the staff of the Rooster in Your hallowed hand! poyp pithatRal aRap paduththu saR guruvAy mun piRappilikku uNarththu siththa: Discarding all false babbling words altogether, You came one day as the Great Master and preached to Lord SivA, who is without origin. utRa nel peruk kuvaip perukku meyth thiruththaNip perumALE.: You are seated in this truthful town of ThiruththaNigai, where heaps of paddy keep on multiplying, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |