திருப்புகழ் 245 உடையவர்கள் ஏவர்  (திருத்தணிகை)
Thiruppugazh 245 udaiyavargaLEvar  (thiruththaNigai)
Thiruppugazh - 245 udaiyavargaLEvar - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான

......... பாடல் .........

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
     யுளமகிழ ஆசு ...... கவிபாடி

உமதுபுகழ் மேரு கிரியளவு மான
     தெனவுரமு மான ...... மொழிபேசி

நடைபழகி மீள வறியவர்கள் நாளை
     நடவுமென வாடி ...... முகம்வேறாய்

நலியுமுன மேயு னருணவொளி வீசு
     நளினஇரு பாத ...... மருள்வாயே

விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
     விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே

விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
     விடவரவு சூடு ...... மதிபாரச்

சடையிறைவர் காண உமைமகிழ ஞான
     தளர் நடையி டாமுன் ...... வருவோனே

தவமலரு நீல மலர்சுனைய நாதி
     தணிமலையு லாவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி ... செல்வம் படைத்தவர்கள்
எவர்கள் எவர்கள் என்று தேடி,

உளமகிழ ஆசுகவிபாடி ... அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது
ஆசுகவிகளைப்* பாடி,

உமதுபுகழ் மேரு கிரியளவும் ஆனது என ... உம் புகழ் மேருமலை
அளவு உயர்ந்தது எனக் கூறியும்,

உரமுமான மொழிபேசி ... வலிமையான முகஸ்துதி மொழிகளைப்
பேசியும்,

நடைபழகி மீள வறியவர்கள் ... நடந்து நடந்து பலநாள் போய்ப்
பழகியும், தரித்திரர்களாகவே மீளும்படி,

நாளை நடவுமென வாடி முகம்வேறாய் ... நாளைக்கு வா என்றே
கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற,

நலியுமுனமே உன் அருணவொளி வீசு ... வருந்தும்
முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற

நளினஇரு பாதம் அருள்வாயே ... தாமரை போன்ற இரு
பாதங்களையும் தந்தருள்வாயாக.

விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் ... ரிஷபத்தை
வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும்,

விகிர்தர் பர யோகர் ... மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும்,

நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு ...
பிறைச்சந்திரன், விளாமர (வில்வ)த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன்
கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு,

விட அரவு சூடும் அதிபாரச் சடையிறைவர் காண ... விஷப்பாம்பு
ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய
சிவபெருமான் கண்டு களிக்கவும்,

உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன்வருவோனே ...
உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே
வருபவனே,

தவமலரு நீல மலர் சுனை ... மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள்
உள்ள சுனையுடையதும்,

அநாதி தணிமலையு லாவு பெருமாளே. ... ஆதியில்லாததுமான
மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.657  pg 1.658  pg 1.659  pg 1.660 
 WIKI_urai Song number: 273 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Ms Sughandhisri K.
சுகந்திஸ்ரீ

Ms Sughandhisri K.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 245 - udaiyavargaL Evar (thiruththaNigai)

udaiyavarka LEva revarkaLena nAdi
     yuLamakizha Asu ...... kavipAdi

umathupukazh mEru kiriyaLavu mAna
     thenavuramu mAna ...... mozhipEsi

nadaipazhaki meeLa vaRiyavarkaL nALai
     nadavumena vAdi ...... mukamvERAy

naliyumuna mEyu naruNavoLi veesu
     naLinairu pAtha ...... maruLvAyE

vidaikoLuvu pAkar vimalarthiri chUlar
     vikir tharpara yOkar ...... nilavOdE

viLavu siRu pULai nakuthalaiyo dARu
     vidavaravu chUdu ...... mathipArach

chadaiyiRaivar kANa umaimakizha gnAna
     thaLar nadaiyi dAmun ...... varuvOnE

thavamalaru neela malar chunaiya nAthi
     thaNimalaiyu lAvu ...... perumALE.

......... Meaning .........

udaiyavarkaL Evar evarkaLena nAdi: Going everywhere in search of wealthy people,

uLamakizha AsukavipAdi: singing their praise in lyrical poems* just to please them, and

umathupukazh mEru kiriyaLavum Anathu ena: saying that their fame is comparable to the loftiness of Mount MEru

uramumAna mozhipEsi: people indulge in excessive flattery!

nadaipazhaki meeLa vaRiyavarkaL: After so many trips to the rich, they are still returning empty-handed!

nALai nadavumena vAdi mukamvERAy: They are hurt hearing the words "Come tomorrow", and their faces lose colour.

naliyumunamE un aruNavoLi veesu naLinairu pAtham aruLvAyE: Before I am doomed like this, please bless me graciously with Your lotus feet that radiate reddish and compassionate glow!

vidaikoLuvu pAkar vimalarthiri sUlar: He mounts the bull, Nandi; He is purity personified; He holds in His hand the trident;

vikirthar para yOkar: He is the Greatest; He is the Supreme Yogi;

nilavOdE viLavu siRu pULai nakuthalaiyodu ARu vidavaravu chUdum: He wears the crescent moon, vilvam (bael) leaf, little pULai (Indian laburnum) flower, the skull with teeth, the river Ganga and the poisonous snake

athiparach sadaiyiRaivar kANa: on His weighty tresses; and while that SivA is watching,

umaimakizha gnAna thaLar nadaiyi dAmun varuvOnE: and to the exhilaration of Mother UmA, You walk before them in gentle gait reflecting wisdom!

thavamalaru neela malar sunai: This place has a pond where blue lilies blossom in plenty;

anAthi thaNimalaiyu lAvu perumALE.: and this is the ancient Mount ThiruththaNigai without a beginning, which is Your abode, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 245 udaiyavargaL Evar - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]