திருப்புகழ் 187 முத்துக்கு  (பழநி)
Thiruppugazh 187 muththukku  (pazhani)
Thiruppugazh - 187 muththukku - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத்தத் தத்தத் தத்தன
     தத்தத்தத் தத்தத் தத்தன
          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான

......... பாடல் .........

முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
     டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
          முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே

முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
     ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
          முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத்

தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
     நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
          செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத்

திட்டத்தைப் பற்றிப் பற்பல
     லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
          சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ

மெத்தத்துக் கத்தைத் தித்தியி
     னிச்சித்தத் திற்பத் தத்தொடு
          மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே

வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
     முக்கட்சித் தர்க்குப் புத்திர
          விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே

நித்யக்கற் பத்திற் சித்தர்க
     ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
          நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும்

நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
     முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
          நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்துக் குச்சு இட்டுக் குப்பி முடித்துச் சுக்கைப் பின்
சுற்றியும்
... முத்தால் ஆன குச்சி அணிந்து குப்பி என்னும் சடை
அணியை முடித்து, பூ மாலையைக் கொண்டையில் பின்னர்ச் சுற்றியும்,

முன் பக்கத்தில் பொற்பு உற்றிட நுதல் மீதே முக்யப் பச்சைப்
பொட்டு இட்டு
... முன் பக்கத்தில் அழகு விளங்க நெற்றியின் மேல்
சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டுக் கொண்டும்,

அணி ரத்நச் சுட்டிப் பொன் பட்டு இவை முச்சட்டைச் சித்ரக்
கட்டழகு எழில் ஆட
... வகிட்டில் அணிகலமாகிய ரத்னச் சுட்டி,
அழகிய பட்டுச் சேலை ஆகியவைகளை ஒழுங்காகவும் அலங்காரமாகவும்
அணிந்து, நல்ல பேரழகு பொலிய,

தித்திக்கச் சொற் சொல் துப்பு இதழ் நச்சுக் கண் கற்புச்
சொக்கியர்
... இனிமை தரும்படி சொல்லும் பேச்சு, பவளம் போன்ற
வாயிதழ், விஷம் நிறைந்த கண், விபரீதமான கற்பனை உரைகள்
(இவைகளைக் கொண்டு) மயக்குவிக்கும் விலைமகளிரின்

செப்புக்கு ஒக்கக் கச்சுப் பெறு தன மேருத் திட்டத்தைப்
பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டுத் தொட்டு
... சிமிழை
ஒத்ததும் கச்சு அணிந்ததும் (ஆகிய) மேருமலை போன்ற மார்பகங்களை
செவ்வையாகப் பற்றி பல விதமான நாணம் கொள்ளத் தக்க
செயல்களுக்கு உட்பட்டு, மேற்கொண்டு

உயிர் சிக்கிச் சொக்கிக் கெட்டு இப்படி உழல்வேனோ ...
அவர்கள் வலையில் என்னுயிர் மாட்டிக் கொண்டு மயங்கி கேடுற்று
இவ்வாறு திரிவேனோ?

மெத்தத் துக்கத்தைத் தித்தி இனிச் சித்தத்தில்
பத்தத்தொடு மெச்சிச் சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
...
அதிகமான துக்கத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில்
உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான
ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக.

வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கண் சித்தர்க்குப் புத்திர
வி(ச்)சித்ரச் செச்சைக் கத்திகை புனைவோனே
... கல்விக்குத்
தலைவனே, பரம்பொருளே, முக்கண்ணராகிய சிவபெருமானுக்குப்
பிள்ளையே, விசித்திரமான வெட்சிப் பூ மாலையை அணிபவனே,

நித்யக் கற்பத்தில் சித்தர்கள் எட்டுத் திக்குக்குள் பட்டவர்
நிஷ்டைக்கு அ(ற்)ன்பு உற்றப் பத்தர்கள் அமரோரும்
...
நித்ய பூமியில் உள்ள சித்தர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும்,
தியானத்தில் அன்பு பூண்ட பக்தர்களும், தேவர்களும்,

நெட்டுக்குப் புட்பத்தைக் கொ(ண்)டு முற்றத்து உற்று
அர்ச்சிக்க
... நெடுந் தூரத்தில் இருந்து மலர்களைக் கொண்டு வந்து
உன் சந்நிதியில் வந்து நின்று அர்ச்சனை செய்து துதிக்க,

பழநிக்குள் பட்டத்துக்கு உற்று உறை பெருமாளே. ... பழனிப்
பதியில் ஆட்சி பூண்டு மகிழ்ந்து உறைகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.376  pg 1.377  pg 1.378  pg 1.379 
 WIKI_urai Song number: 155 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 187 - muththukkuch chittu (pazhani)

muththukkuch chittuk kuppimu
     diththuchchuk kaippiR chutRiyu
          muRpakkath thiRpoR putRida ...... nuthalmeethE

mukyappach chaippot tittaNi
     rathnachchut tippoR pattivai
          muchchattaich chithrak kattazha ...... kezhilAdath

thiththikkach choRchot Ruppithazh
     nachchukkat kaRpuch chokkiyar
          seppukkok kakkach chuppeRu ...... thanamEruth

thittaththaip patRip paRpala
     lachchaikkut pattuth thottuyir
          sikkichchok kikket tippadi ...... yuzhalvEnO

meththaththuk kaththaith thiththiyi
     nichchiththath thiRpath thaththodu
          mechchichchork kaththiR chiRpara ...... maruLvAyE

viththaikkuk karthruth thaRpara
     mukkatchith tharkkup puththira
          vichchithrach chechchaik kaththikai ...... punaivOnE

nithyakkaR paththiR chiththarka
     Lettuththik kukkut pattavar
          nishtaikkaR putRap paththarkaL ...... amarOrum

nettukkup putpath thaikkodu
     mutRaththut Rarchchik kappazha
          nikkutpat taththuk kutRuRai ...... perumALE.

......... Meaning .........

muththuk kuchchu ittuk kuppi mudiththuch chukkaip pin sutRiyum: Inserting into their hair a stick of pearls, they tie up the ornament called kuppi and then don a flower garland around the tuft;

mun pakkaththil poRpu utRida nuthal meethE mukyap pachchaip pottu ittu: in front, on their face, they place a beautiful and decorative green mark in the centre of the forehead;

aNi rathnach chuttip pon pattu ivai muchchattaich chithrak kattazhaku ezhil Ada: on the parting of their hair, they wear chutti (a string) made of precious gems; and they wrap around their waist with a gorgeous silk sari so perfectly and elegantly that their beauty just exudes;

thiththikkach choR chol thuppu ithazh nachchuk kaN kaRpuch chokkiyar: these whores are endowed with a sweet speech, coral-like lips and eyes soaked in poison; with words springing from their wild imagination, they are simply enchanting;

seppukku okkak kachchup peRu thana mEruth thittaththaip patRiya paRpala lachchaikku udpattuth thottu: shaped like copper pots, their bloused bosom resembles Mount MEru, and holding on to them, I indulge in many shameful acts and venture beyond;

uyir sikkich chokkik kettu ippadi uzhalvEnO: with my life being ensnared by these whores, why am I roaming about wretchedly in a daze?

meththath thukkaththaith thiththi inich chiththaththil paththaththodu mechchich chorkkaththil siRparam aruLvAyE: I have already suffered excessively, and from now on, I have truly made up my mind to praise Your glory; kindly bless me to attain the bliss of true knowledge in the celestial world!

viththaikkuk karthruth thaRpara mukkaN siththarkkup puththira vi (ch)chithrach chechchaik kaththikai punaivOnE: Oh Leader of all learning! Oh Supreme Lord! You are the son of the three-eyed Lord SivA! You wear the wonderful garland of vetchi flowers!

nithyak kaRpaththil siththarkaL ettuth thikkukkuL pattavar nishtaikku a (R)npu utRap paththarkaL amarOrum: The sidhdhas (achievers) in the eternal land, along with people in all the eight directions and the celestials, along with devotees who relish meditation

nettukkup putpaththaik ko (N)du mutRaththu utRu archchikka: fetch flowers from far-off places coming to Your shrine and offer those flowers in worship in

pazhanikkuL pattaththukku utRu uRai perumALE.: this place Pazhani, where You reign and are seated with joy, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 187 muththukku - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]