திருப்புகழ் 182 மனக்கவலை ஏதும்  (பழநி)
Thiruppugazh 182 manakkavalaiEdhum  (pazhani)
Thiruppugazh - 182 manakkavalaiEdhum - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
     தனத்ததன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே

வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்

மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே

செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மனக்கவலை யேது மின்றி ... மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல்,

உனக்கடிமை யேபு ரிந்து ... உனக்குத் தொண்டு செய்யும் பணியையே
பூண்டு,

வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே ... வகையாக அமைந்துள்ள
நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல்,

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி ...
நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து,

மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி ... சந்தேகம்
அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து,

வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) ... வினையைக் கொடுக்கும்
பாவச்செயல்களை அறவே அகற்றி,

உவகை யால் நினைந்து ... ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து,

மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே ... மேலான பொருளைக்
கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி,

வெகுட்சிதனையே துரந்து ... கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி,

களிப்பினுடனே நடந்து ... மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து
நடந்து,

மிகுக்கும் உனையே வணங்க ... யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும்
உன்னையே வணங்குதற்கு

வரவேணும் ... (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும்.

மனத்தில்வருவோனெ என்(று) ... தியானித்தால் மனத்தில்
வருபவனே என்று நினைத்து

உன் அடைக்கலம் அதாக வந்து ... உன் அடைக்கலப் பொருளாக
வந்து சேர்ந்து

மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள் ... உன் மலர்த் திருவடியே
பணிந்த முனிவர்களுக்கும்,

வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும் ... பிற
வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும்,

மனமேயிரங்கி ... மனம் இரக்கப்பட்டு,

மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா ... பயமுறுத்தி வந்த
சூரரை வென்ற கூரிய வேலனே,

தினைப்புனமுனே நடந்து ... தினைப்புனத்துக்கு முன்னொருநாள்
நடந்துசென்று

குறக்கொடியையே மணந்து ... குறவர்கொடி வள்ளியையே
மணஞ்செய்து,

செகத்தை முழுதாள வந்த பெரியோனே ... இந்த உலகம்
முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே,

செழித்தவளமே சிறந்த ... செழிப்புற்ற, வளம் பொலிந்த

மலர்ப்பொழில்களே நிறைந்த ... மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள

திருப்பழநி வாழவந்த பெருமாளே. ... திருப்பழனியில் வீற்றிருக்க
வந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.452  pg 1.453  pg 1.454  pg 1.455 
 WIKI_urai Song number: 186-A 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 182 - manakkavalai Edhum (pazhani)

manakkavalai Edhum indri unakkadimai yEpu rindhu
     vagaikkumanu nUlvi dhangaL ...... thavaRAdhE

vagaippadima nOra dhangaL thogaippadiyi nAli langi
     mayakkamaRa vEdha mungkoL ...... poruLnAdi

vinaikkuriya pAdha gangaL thugaiththuvagai yAlni naindhu
     miguththaporuL Aga mangaL ...... muRaiyAlE

vegutchithanai yEthu randhu kaLippinuda nEna dandhu
     migukkumunai yEva Nanga ...... varavENum

manaththilvaru vOnE endRun adaikkalama dhAga vandhu
     malarppadhama dhEpa Nindha ...... munivOrgaL

vararkkumimai yOrgaL enbar thamakkumana mEyi rangi
     maruttivaru sUrai vendRa ...... munaivElA

thinaippunamu nEna dandhu kuRakkodiyai yEma Nandhu
     jegaththaimuzhu dhALa vandha ...... periyOnE

sezhiththavaLa mEsi Randha malarppozhilga LEni Raindha
     thiruppazhani vAzha vandha ...... perumALE.

......... Meaning .........

manakkavalai Edhum indri unakkadimaiyE purindhu: Without any worry in my mind, I would like to serve You

vagaikku manu nUl vidhangaL thavaRAdhE: in accordance with, and not deviating from, the rules laid down by scriptures covering various morals.

vagaippadi manOradhangaL thogaippadiyinAl ilangi: My several desires about this service must be fulfilled.

mayakkamaRa vEdhamungkoL poruL nAdi: I must seek the inner meaning of all scriptures without any doubt.

vinaikkuriya pAdhagangaL thugaiththu: I must shun all sinful activities which lead to bad Karma.

uvagaiyAl ninaindhu: I must contemplate You with pleasure

miguththa poruL AgamangaL muRaiyAlE: as formulated in the Vedha AgamAs (scriptural instructions).

vegutchi thanaiyE thurandhu: I must totally give up anger in my pursuit.

kaLippinudanE nadandhu: My conduct must be one of happy discharge of my duties.

migukku munaiyE vaNanga varavENum: For me to worship, You, superior to who is the Supreme, must manifest before me graciously!

manaththil varuvOnE endrun adaikkalamadhAga vandhu: "At the very thought You come to our heart" - so spoke those who sought refuge in You;

malarppadham adhE paNindha munivOrgaL: those were the sages who bowed at Your lotus feet;

vararkkum imaiyOrgaL enbar thamakku manamE irangi: for the sake of the sages, the blessed ones and the DEvAs, You came down with a lot of compassion

marutti varu sUrai vendra munaivElA: and conquered the intimidating asura, SUran, with Your sharp spear!

thinaippuna munE nadandhu kuRakkodiyaiyE maNandhu: Once You went walking to the millet-field and eventually married VaLLi, the damsel of the KuRavas.

jegaththai muzhudhALa vandha periyOnE: You came to rule the entire universe, Oh Great One!

sezhiththa vaLamE siRandha malarp pozhilgaLE niRaindha: There is plenty of fertility and flowery groves

thiruppazhani vAzha vandha perumALE.: around Pazhani, which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 182 manakkavalai Edhum - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]