திருப்புகழ் 159 சீறல் அசடன்  (பழநி)
Thiruppugazh 159 seeRalasadan  (pazhani)
Thiruppugazh - 159 seeRalasadan - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தனதான

......... பாடல் .........

சீற லசடன்வினை காரன் முறைமையிலி
     தீமை புரிகபடி ...... பவநோயே

தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
     சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்

கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
     கோள னறிவிலியு ...... னடிபேணாக்

கூள னெனினுமெனை நீயு னடியரொடு
     கூடும் வகைமையருள் ...... புரிவாயே

மாறு படுமவுணர் மாள அமர்பொருது
     வாகை யுளமவுலி ...... புனைவோனே

மாக முகடதிர வீ சு சிறைமயிலை
     வாசி யெனவுடைய ...... முருகோனே

வீறு கலிசைவரு சேவ கனதிதய
     மேவு மொருபெருமை ...... யுடையோனே

வீரை யுறைகுமர தீர தரபழநி
     வேல இமையவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீற லசடன் ... சீறி விழும் சினத்தை உடைய கீழ்மகன்,

வினைகாரன் முறைமையிலி ... தீவினைகளைச் செய்கின்றவன்,
ஒழுக்கம் இல்லாதவன்,

தீமை புரிகபடி ... பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன்,

பவநோயே தேடு பரிசி ... பிறவிநோயையே தேடுகின்ற
தன்மையுடையவன்,

கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி ... பெருமை,
நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும்
இல்லாதவன்,

எவரோடுங் கூறு மொழியது பொய்யான ... எல்லோருடனும்
பொய்யையே பேசித் திரியும்

கொடுமையுள கோளன் ... கொடுமையே கொண்ட தீயவன்,

அறிவிலி உன்அடிபேணாக் கூளன் ... அறிவில்லாதவன், உனது
திருவடிகளைப் பணியாத குப்பை போன்றவன்,

எனினுமெனை நீயுன் அடியரொடு ... இப்படிப்பட்டவனாக
இருப்பினும் என்னை நீ உன் அடியார்களுடைய

கூடும் வகைமையருள் புரிவாயே ... திருக்கூட்டத்தில் கூட்டி
வைக்கும்படியான வழியைத் தந்து அருள்வாயாக.

மாறு படுமவுணர் மாள அமர்பொருது ... நீதி நெறியினின்று
மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகப் போர் செய்து,

வாகை யுளமவுலி புனைவோனே ... வெற்றியோடு கூடிய
மகுடத்தைத் தரித்தவனே,

மாக முகடதிர ... அண்டத்தின் உச்சி அதிரும்படியாக

வீசு சிறைமயிலை ... இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை

வாசி யெனவுடைய முருகோனே ... குதிரையைப் போல
வாகனமாக உடைய முருகப் பெருமானே,

வீறு கலிசைவரு சேவகனது இதயம் ... புகழ் பெற்ற கலிசை*
என்ற ஊரில் வாழ்ந்த மன்னனது உள்ளத்தில்

மேவு மொருபெருமை யுடையோனே ... வீற்றிருக்கும் ஒப்பற்ற
பெருமை உடையவனே,

வீரை யுறைகுமர ... வீரை* என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற
குமார ஸ்வாமியே,

தீரதர பழநி வேல ... தைரியம் உடையவனே, பழனியில்
எழுந்தருளிய வேலாயுதனே,

இமையவர்கள் பெருமாளே. ... தேவர்கள் வணங்கும் பெருமாளே.


* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய
சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,
முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.302  pg 1.303  pg 1.304  pg 1.305 
 WIKI_urai Song number: 121 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 159 - seeRal asadan (pazhani)

seeRal asadan vinaikAran muRaimayili
     theemai puri kabadi ...... bava nOyE

thEdu parisi gana needhi neRi muRaimai
     seermai siridhumili ...... evarOdum

kURu mozhiyadhu poyyAna kodumaiyuLa
     kOLan aRivili ...... unadi pENA

kULan eninum enai neeyun adiyorodu
     kUdum vagaimai aruL ...... purivAyE

mARu padum avuNar mALa amar porudhu
     vAgai yuLa mavuli ...... punaivOnE

mAga muga dadhira veesu siRai mayilai
     vAsi yena udaiya ...... murugOnE

veeRu kalisai varu sEva ganadhidhaya
     mEvum oru perumai ...... udaiyOnE

veerai uRai kumara dheera dhara pazhani
     vEla imaiyavargaL ...... perumALE.

......... Meaning .........

seeRal asadan vinaikAran: I am an ill-tempered raging fool; I always do bad deeds;

muRaimayili theemai puri kabadi: I am a characterless, sinning schemer;

bava nOyE thEdu parisi: I seek the disease of repeated births;

gana needhi neRi muRaimai seermai siridhumili: I do not have an iota of prestige, moral, honesty, justice or greatness;

evarOdum kURu mozhiyadhu poyyAna: my speech to everyone is packed with lies;

kodumaiyuLa kOLan: I have an evil mind and I am wicked;

aRivili unadi pENA kULan: I am stupid; and I am a scum who never bothers to worship Your feet.

eninum enai neeyun adiyorodu kUdum: Despite all my shortcomings, You must make me join Your devotees;

vagaimai aruL purivAyE: kindly find a way to bless me accordingly.

mARu padum avuNar mALa amar porudhu: You killed the demons who deviated from the right path

vAgai yuLa mavuli punaivOnE: (after) fighting with them You wore the Victory Crown!

mAga muga dadhira veesu siRai mayilai: Your peacock flew with fluttering feathers over the mountains shaking their crests,

vAsi yena udaiya murugOnE: and You reined it, mounting it as if it were a horse!

veeRu kalisai varu sEva ganadhidhaya: In the heart of the King of famous Kalisai*

mEvum oru perumai udaiyOnE: You always remain, and that is Your incomparable greatness!

veerai uRai kumara: Oh KumarA, You also remain in the place called Veerai*!

dheera dhara pazhanivEla: You have tremendous valour, Oh VElA, having Your abode at Pazhani!

imaiyavargaL perumALE.: You are worshipped by all DEvAs, Oh Great One!


* AruNagirinAthar seldom sings about humans, with a few exceptions.
One such person was King of Kalisai, a sincere devotee of Murugan, and a friend of the poet.
The King built a temple for Murugan at Veerai invoking Pazhani Murugan's blessings.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 159 seeRal asadan - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]