திருப்புகழ் 124 ஒருவரை ஒருவர்  (பழநி)
Thiruppugazh 124 oruvaraioruvar  (pazhani)
Thiruppugazh - 124 oruvaraioruvar - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தான தனதன தனன தான
     தனதன தனன தான ...... தனதான

......... பாடல் .........

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
     ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
     உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்

வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
     மறைவரி னனைய கோல ...... மதுவாக

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
     வடிவுற அருளி பாத ...... மருள்வாயே

திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
     திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்

திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
     திருநட மருளு நாத ...... னருள்பாலா

சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
     துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே

சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
     தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் ... ஒருவர் சொல்வதை மற்றவர்
இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய

மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் ... மத
ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை
உடையவர்களுமான மக்கள்

உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி ... இந்த
உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும்
செய்து கொண்டே வந்து,

உற நமன் நரகில் வீழ்வர் ... இறுதியாக அனைவரும் யமனுடைய
நரகத்தில் சென்று வீழ்வர்.

அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி ... அந்த நிலை
முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,

இருவினை கடலுள் ஆடி மறைவர் ... நல்வினை, தீவினை என்ற
இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.

இனனைய கோலம் அதுவாக ... இத்தகைய மனிதர்களின் கோலம்
அவ்வாறாக,

மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு ... (யான் அவ்வாறு
அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக
திருநீற்றைத் தந்து,

வடிவுற அருளி பாதம் அருள்வாயே ... நல்ல நிலையை நான்
அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.

திரிபுர மெரிய வேழ சிலைமதனெரிய ... திரிபுரம் எரிந்து விழவும்,
கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரிந்து விழவும்

மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞானகுருநாதன் ... புன்சிரிப்பாலும்,
நெற்றியிலுள்ள திருக்கண்ணாலும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான
குருநாதனும்,

திருசரஸ்வதி மயேசுவரியிவர் தலைவர் ஓத ... லக்ஷ்மி, சரஸ்வதி,
மஹேஸ்வரி ஆகியோரது தலைவர்களாகிய திருமால், பிரமன், ருத்திரன்
ஆகியோர் ஓதிப் போற்ற

திருநடம் அருளு நாதன்அருள்பாலா ... திரு நடனம் ஆடி
அருளிய நாதன் சிவபிரான் அருளிய குழந்தையே,

சுரர்பதி யயனு மாலு முறையிட ... தேவர்கள் தலைவன்
இந்திரனும், பிரமனும், திருமாலும் முறையிட்டு உன்னடி பணிய,

அசுரர் கோடி துகளெழ விடு ... அசுர கோடிகள் தூளாகுமாறு
செலுத்திய

மெய்ஞ் ஞான அயிலோனே ... மெய்ஞ்ஞான சக்தி வேலாயுதனே,

சுககுற மகள்ம ணாளனென மறை பலவு மோதி தொழ ...
சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள்
பலவும் போற்றிப் புகழ,

முது பழநி மேவு பெருமாளே. ... பழமை வாய்ந்த பழநிப்பதியில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.402  pg 1.403  pg 1.404  pg 1.405 
 WIKI_urai Song number: 167 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Ms Sughandhisri K.
சுகந்திஸ்ரீ

Ms Sughandhisri K.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 124 - oruvarai oruvar (pazhani)

oruvarai yoruvar thERi yaRikilar mathavi cArar
     orukuNa vazhiyu RAtha ...... poRiyALar

udalathu sathame nAdi kaLavupoy kolaika LAdi
     uRanama narakil veezhva ...... rathupOypin

varumoru vadiva mEvi yiruvinai kadalu LAdi
     maRaivari nanaiya kOla ...... mathuvAka

maruviya parama njAna sivakathi peRuka neeRu
     vadivuRa aruLi pAtha ...... maruLvAyE

thiripura meriya vEzha silaimatha neriya mUral
     thiruvizhi yaruLmeynj njAna ......gurunAthan

thirusaras vathima yEsu variyivar thalaiva rOtha
     thirunada maruLu nAtha ...... naruLbAlA

surarpathi yayanu mAlu muRaiyida asurarkOdi
     thukaLezha vidumeynj njAna ...... ayilOnE

sukakuRa makaLma NALa nenamaRai palavu mOthi
     thozhamuthu pazhani mEvu ...... perumALE.

......... Meaning .........

oruvarai yoruvar thERi yaRikilar mathavi cArar: Those people doing research in religion are such that one's statement is not understood by the others;

orukuNa vazhiyu RAtha poRiyALar: those with a mind not capable of abiding by any one principle;

udalathu sathame nAdi kaLavupoy kolaika LAdi: and those who believe in the perpetuity of the body and keep on committing sins like stealing, lying and murder;

uRanama narakil veezhvar: ultimately, will all fall into hell controlled by the God of Death (Yaman).

athupOypin varumoru vadiva mEvi: After that phase, they will assume whatever shape or body destined for them,

yiruvinai kadalu LAdi maRaivar: suffering deep inside the sea of good and bad deeds and will become extinct.

inanaiya kOla mathuvAka: Be their status as it may,

maruviya parama njAna sivakathi peRuka neeRu: (lest I suffer like them - ) in order that I attain the ultimate wisdom of Destination SivA, kindly bless me with holy ash,

vadivuRa aruLi pAtha maruLvAyE: bestowing me with good position, and grant me Your hallowed feet.

thiripura meriya vEzha silaimatha neriya: He burnt down Thiripuram and Manmathan, holding the bow of sugarcane,

mUral thiruvizhi yaruLmeynj njAna gurunAthan: by His mere smile and the fiery eye (in His forehead); that eye generated sparks from which You were born, Oh Master!

thirusaras vathima yEsu variyivar thalaiva rOtha: The consorts of Lakshmi, Saraswathi and Maheswari (namely, Vishnu, BrahmA and Rudra) sang His glory while

thirunada maruLu nAtha naruLbAlA: He (NadarAjA), the great leader, performed the cosmic dance; You are that SivA's child!

surarpathi yayanu mAlu muRaiyida: When IndrA, the Chief of the Celestials, BrahmA and Vishnu appealed and sought Your refuge,

asurarkOdi thukaLezha vidumeynj njAna ayilOnE: You shattered the millions of demons into dust by wielding Your Spear, which is nothing but True Wisdom!

sukakuRa makaLma NALanena maRai palavu mOthi thozha: Several scriptures worship You as the Consort of VaLLi, the delectable belle of the KuRavAs.

muthu pazhani mEvu perumALE.: You have chosen the ancient town Pazhani as Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 124 oruvarai oruvar - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]