திருப்புகழ் 102 வெங்காளம் பாணம்  (திருச்செந்தூர்)
Thiruppugazh 102 vengkALampANam  (thiruchchendhUr)
Thiruppugazh - 102 vengkALampANam - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான

......... பாடல் .........

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
     மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்
     மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
     வன்பே துன்பப் ...... படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
     வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
     குன்றாள் கொங்கைக் ...... கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
     ரும்போய் மங்கப் ...... பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
     கன்றே வும்பர்க் ...... கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
     கந்தா செந்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வெங்கா ளம்பாணஞ்சேல் கண் ... கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன்
- இவற்றை ஒத்த கண்கள்,

பால் மென்பாகு அஞ்சொற் குயில் ... பால், மென்மையான
வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,

மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் ... இருளை ஒத்த
மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது
மாதர்களின்

மென்றோள் ஒன்றப் பொருள்தேடி ... மென்மையான தோள்களைத்
தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,

வங்காளஞ் சோனஞ் சீனம்போய் ... வங்காள நாடு, சோனக நாடு*,
சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்

வன்பே துன்பப் படலாமோ ... வம்பிலே கொடிய துன்பத்தைப்
படலாமோ?

மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா ... வலிமை மிகுந்த
தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,

வந்தே யிந்தப் பொழுதாள்வாய் ... வந்து இந்த நொடியிலேயே
என்னை ஆண்டருள்வாயாக.

கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் ... வாசனை மிக்க
பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்

குன்றாள் கொங்கைக் கினியோனே ... வள்ளிமலையில்
வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,

குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் ... சூரனுக்கு அரணாக
விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,

போய் மங்கப் பொருகோபா ... பட்டு அழியும்படியாக போர்
செய்த சினத்தை உடையவனே,

கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே ... எலும்புகளும்
கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய
சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,

உம்பர்க் கொருநாதா ... தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் ... சங்குகள் தவழும்
கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,

கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.132  pg 1.133 
 WIKI_urai Song number: 43 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 102 - vengkALam pANam (thiruchchendhUr)

vengA LampA NanjcEl kaNpAl
     menpA kanjcoR ...... kuyilmAlai

menkE canthA nenRE koNdAr
     menRO LonRap ...... poruLthEdi

vangA LanjcO nanjcee nampOy
     vanpE thunbap ...... padalAmO

maindhA runthOL mainthA anthA
     vanthE yinthap ...... pozhuthALvAy

kongkAr painthE nuNdE vaNdAr
     kunRAL kongkaik ...... kiniyOnE

kunRO dunjcU zhampE zhunjcU
     rumpOY mangkap ...... porukOpA

kangkA LanjcEr moympA ranpAr
     kanRE vumpark ...... korunAthA

kampUr cinthAr thenpAl vanthAy
     kanthA centhiR ...... perumALE.

......... Meaning .........

vengA LampA NanjcEl kaN: "Their eyes are like deadly poison, arrows and cEl fish;

pAl menpA kanjcoR kuyil: their speech is sweet as milk, molten jaggery and cuckoo's music;

mAlai men kEcanthA nenRE koNdAr: their soft hair is like the darkness"; and so on. Thus describing the harlots,

menRO LonRap poruLthEdi: people roam in search of wealth to enable them to embrace their soft shoulders;

vangA LanjcO nanjcee nampOy: they go to far away places like Bengal, ChOnakam* and China

vanpE thunbap padalAmO: to suffer unnecessary miseries. Is it worthwhile?

maindhA runthOL mainthA anthA: Oh KumarA, with strong shoulders! Oh handsome one!

vanthE yinthap pozhuthALvAy: Please come right at this moment and take charge of me!

kongkAr painthE nuNdE vaNdAr kunRAL: She lives in VaLLimalai, which is full of beetles imbibing fragrant and fresh honey;

kongkaik kiniyOnE: You fondly hug the bosom of that VaLLi!

kunRO dunjcU zhampE zhunjcUrum: The seven protective hills of SUran, the seven seas and SUran himself

pOY mangkap porukOpA: were destroyed by Your wrath, Oh Lord!

kangkA LanjcEr moympA ranpAr kanRE: He wears a garland of bones and skulls around His shoulders. You are the loving child of that Lord SivA.

vumpark korunAthA: You are the unique master of the Celestials!

kampUr cinthAr thenpAl vanthAy: You came to reside in the south shore of the sea full of floating conch shells.

kanthA centhiR perumALE.: Oh KanthA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!


* ChOnakam is one of the 56 countries that constituted India in olden times.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 102 vengkALam pANam - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]