திருப்புகழ் 72 நிலையாப் பொருளை  (திருச்செந்தூர்)
Thiruppugazh 72 nilaiyApporuLai  (thiruchchendhUr)
Thiruppugazh - 72 nilaiyApporuLai - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனாத் தனன தனனாத் தனன
     தனனாத் தனன ...... தனதான

......... பாடல் .........

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
     நெடுநாட் பொழுது ...... மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
     நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
     மடிவேற் குரிய ...... நெறியாக

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
     மலர்தாட் கமல ...... மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
     குளமாய்ச் சுவற ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
     கொதிவேற் படையை ...... விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
     அழியாப் புநித ...... வடிவாகும்

அரனார்க் கதித பொருள்காட் டதிப
     அடியார்க் கெளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிலையாப் பொருளை ... நிலையில்லாத பொருட்களை

உடலாக் கருதி ... பொன்னாக மதித்து,

நெடுநாட் பொழுதும் அவமேபோய் ... நீண்ட நாட்களெல்லாம்
வீணாக்கி,

நிறைபோய் ... மனத்திண்மை போய்,

செவிடு குருடாய் ... செவிடாகி, குருடாகி,

பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி ... நோய்கள் மிகுந்து,
ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து,

மலநீர் ... மலமும், சிறுநீரும்

சயன மிசையாப் பெருகி ... படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி)
பெருகி,

மடிவேற்கு ... இறந்து படுவேனுக்கு,

உரிய நெறியாக ... கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக,

மறைபோற் றரிய ... வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான

ஒளியாய்ப் பரவு ... ஒளியாக விரிந்துள்ள

மலர்தாட் கமலம் அருள்வாயே ... நின்மலர்த் தாமரையை
தந்தருள்வாயாக.

கொலைகாட்டு அவுணர் கெட ... கொலையே செய்து வருகின்ற
அசுரர்கள் அழிய,

சலதி குளமாய்ச் சுவற ... பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக,

முதுசூதம் ... முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்)

குறிபோய்ப் பிளவு பட ... குறிவைத்தபடி பட்டு, பிளவுபட,

மேற் கதுவு ... மேலே பற்றும்படியாக பிடியுள்ள

கொதிவேற் படையை விடுவோனே ... எரிவீசும் வேற்படையை
செலுத்தியவனே,

அலைவாய்க் கரையின் ... திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
கடற்கரையில்

மகிழ்சீர்க் குமர ... மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே,

அழியாப் புநித வடிவாகும் அரனார்க்கு ... அழியாத பரிசுத்த
வடிவில் உள்ள சிவனார்க்கு

அதித பொருள்காட் டதிப ... யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை
விளக்கிய அதிபனே,

அடியார்க் கெளிய பெருமாளே. ... அடியவர்களுக்கு எளிதான
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.196  pg 1.197  pg 1.198  pg 1.199 
 WIKI_urai Song number: 78 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 72 - nilaiyAp poruLai (thiruchchendhUr)

nilaiyAp poruLai udalAk karudhi
     nedunAt pozhudhum ...... avamEpOy

niRaipOy sevidu kurudAyp piNigaL
     niRaivAy poRigaL ...... thadumARi

malaneer sayana misaiyAp perugi
     madivER kuriya ...... neRiyAga

maRaipOt Rariya oLiyAy paravu
     malarthAt kamalam ...... aruLvAyE

kolaikAt tavuNar kedamAc chaladhi
     kuLamAyc chuvaRa ...... mudhusUdham

kuRipOyp piLavu padamER kadhuvu
     kodhivER padaiyai ...... viduvOnE

alaivAy karaiyin maghizhseerk kumara
     azhiyAp punidha ...... vadivAgum

araNArk kadhidha poruLkAt tadhipa
     adiyArk keLiya ...... perumALE.

......... Meaning .........

nilaiyAp poruLai udalAk karudhi: Deeming the transient things as solid gold,

nedunAt pozhudhum avamEpOy: I wasted so many days.

niRaipOy sevidu kurudAy: I lost my concentration, became deaf and blind,

piNigaL niRaivAy: my body was filled with diseases,

poRigaL thadumARi: and my five senses became confused.

malaneer sayana misaiyAp perugi: Faeces and urine were involuntarily discharged on my bed.

madivER ku: I was dying.

uriya neRiyAga: For me, the right path towards salvation

marai pOtraRiya oLiyAy paravu: is the expansive bright light, beyond description for the Scriptures,

malarthAt kamalam aruLvAyE: emanating from Your Lotus-Feet, which You must kindly grant me.

kolaikAt tavuNar keda: The demons (asuras), who were murderers, were destroyed;

mA chaladhi kuLamAy suvaRa: the big ocean dried up as a little pond; and

mudhusUdham: the old mango tree (in which disguise was SUran)

kuRipOy piLavu pada: was hit and split into two;

mER kadhuvu kodhi vER padaiyai viduvOnE: when You threw the burning Spear with a firm grip.

alaivAy karaiyin magizh seer kumara: You happily reside on the shore of ThiruchchendhUr, Oh KumarA,

azhiyAp punidha vadivAgum araNAr: Lord SivA, with everlasting pure form,

adhidha poruL kAt tadhipa: was taught by You the meaning of OM, which is beyond everything.

adiyArk keLiya perumALE.: But You are so easy to reach for Your devotees, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 72 nilaiyAp poruLai - thiruchchendhUr


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]