ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 தைப்பிங்கின் தளபதியே காக்க வா! வா!
Thaipingkin thaLapathiyE, kAkka vA! vA!
 
Poems Songs for Lord Murugan    இராம. சிவராமன் M.A.B.L.
    கீழச்சிவல்பட்டி, தமிழ் நாடு

   Ma Sivaraman
   Keezhachivalpatti
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

மலைபாசம் செய்தருளால் மக்கள் வெள்ளம்
மகிழ்ச்சிபெற ஆட்சிபுரி தண்ட பாணி
மலைநாட்டின் அமைதிநகர் தைப்பிங் கின்கண்
மனமிரங்கிப் பக்தர்களை வாழ்த்தும் வேந்தே
அலைகடலுக் கப்பாலுள் சுற்றத் தாரை
அன்பாக இரட்சிக்கும் முருக வேளே!
தலைதாழ்த்தி வணங்குகிறேன் இன்பம் தேங்க
தைப்பிங்கின் தளபதியே காக்க வாவா!

விண்ணுயரும் ஏவுகணை பறந்த போதும்
வியர்வைக்கு மதிப்புதரும் சமுதா யத்தை
மண்ணுயரப் பாடுபடும் வாழ்க்கைக் காவை
மாட்சிபெற தாயைப்போல் தந்தை போல
கண்ணயரா திருந்தருளை கரும்பே யாக
கனிவாகத் தருகின்ற தண்ட பாணி
தண்டனிட்டு வணங்குகிறேன் இன்பம் தேங்க
தைப்பிங்கின் தளபதியே காக்க வாவா!!

ஏழையெனச் செல்வரெனப் பாகு பாடு
இதயத்தில் கொள்ளாமல் இருக்கும் தெய்வம்
வாழையென வளம்வளர செழுமை ஓங்கி
வாட்டமென ஒன்றில்லா திருப்ப தற்கு
நாளையெனச் சுணங்காது அன்றைக் கன்றே
நலம்பொழியத் தயங்காத குறிஞ்சி நாடன்
தாளைநான் வணங்குகிறேன் இன்பம் தேங்க
தைப்பிங்கின் தளபதியே காக்க வாவா!!!

திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி.


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

Thaipingkin thaLapathiyE
Ma Sivaraman

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]