![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 83 தேங்கிய அண்டத்து Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 83 thEngkiya aNdaththu |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 83 ... தேங்கிய அண்டத்து தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல் வாங்கிய னுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. ......... சொற்பிரிவு ......... தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம் தனிவேல் வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே. ......... பதவுரை ......... தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளுக்கே அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட திருமுருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய மயிலின்மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழிவிட்டன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.88 WIKI_urai Song number: 83 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 83 - thEngkiya aNdaththu thEngkiya aNdaththu imaiyOr siRaividach sitRadikkE pUngazhal kattum perumAL kalAbap puravimisai thAngki nadappa muRindhathu sUran thaLam thanivEl vAngki anuppidak kundRangaL ettum vazhivittavE. In order to release the celestials from imprisonment, Lord ThirumurugapperumAn had the beautiful heroic anklets tied around His sacred little feet, and the moment the Lord mounted the horse-like feathery-tailed peacock, and took a few strides, the army of the demon SUrapanman cracked, and when the Lord hurled the incomparable lance, the [legendary] eight hills moved aside, and gave way. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |