Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 61  வரை அற்று
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 61  varai atRu
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 61 ... வரை அற்று

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
   புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
      றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
         கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.

......... சொற்பிரிவு .........

வரை அற்று அவுணர் சிரம் அற்று வாரிதி வற்றச் செற்ற
   புரை அற்ற வேலவன் போதித்தவா பஞ்சபூதமும் அற்று
      உரை அற்று உணர்வு அற்று உடலற்று உயிரற்று உபாயம் அற்று
         கரையற்று இருளற்று எனதற்று இருக்கும் அக்காட்சியதே.

......... பதவுரை .........

கிரௌஞ்சமலை பிளந்து ஒழியவும், அவுணர்கள் தலையற்று உருளவும்,
கடல் வற்றவும் அழித்தருளிய குற்றமற்ற ஞானசக்தியை உடையவரான
திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்து அருளிய காட்சியாவது,
மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும் நீங்கி, சொல்லற்று,
உணர்வும் நீங்கி, உடலும் அறவே இல்லாமல் அழிந்து, உயிரின் தன்மையும்
நீங்கி, சாதனங்களும் நீங்கி, கரையற்று, ஆணவ இருளும் தேய்ந்து,
'எனது' என்னும் புறப்பற்றும் அகன்று, சமாதி நிலையில் இருக்கும்
அருட்காட்சியாகும்!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.67 
 WIKI_urai Song number: 61 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 61 - varai atRu

varai atRu avuNar siram atRu vAridhi vatRach setRa
   purai atRa vElavan pOdhiththavA panjabUdhamum atRu
      urai atRu uNarvu atRu udalatRu uyiratRu ubAyam atRu
         karaiyatRu iruLatRu enadhatRu irukkum akkAtchiyadhE.

The state of beatitude [samAdhi], graciously expounded to me by ThirumurugapperumAn, the bearer of the stainless lance of wisdom, which caused the splitting and annihilation of the krauncha-hill, the rolling down of the demons' severed-heads, the drying-up of the ocean [wherein the demons had hidden], was bereft of the five-elements of nature as well as speech, feeling, body and soul, expedients, frontiers, the obliterated-darkness of arrogance, and attachment to the various things of the external world.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 61 - varai atRu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]