![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 49 சூரில் கிரியில் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 49 sUril giriyil |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 49 ... சூரில் கிரியில் சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ் சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த் தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. ......... சொற்பிரிவு ......... சூரில் கிரியில் கதிர் வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரின் கதி அன்றி வேறிலை காண் தண்டு தாவடி போய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே. ......... பதவுரை ......... ஓ' மனமே, சூரபன்மன் மீதும் கிரௌஞ்சமலை மீதும் ஒளிவீசும் வேலை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் அடியார்களது திருக்கூட்டத்தை அடைவதைவிட சிறந்த கதி வேறு ஒன்றும் எங்கும் இல்லை என்பதைக் காண்பாயாக. படைகளுடன் பிரயாணம்செய்து, தேரின்மீதும் யானையின்மீதும் குதிரையின்மீதும் ஏறி உலாவுகின்ற [அரசர்களுடைய] செல்வம் முழுவதும் நீரின்மீது எழுதிய எழுத்துக்கு ஒப்பாகும் என்று நீ உணரவில்லையே, நீண்டகாலப் பாவியாகிய மனமே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.54 pg 4.55 WIKI_urai Song number: 49 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 49 - sUril giriyil sUril giriyil kadhir vEl eRindhavan thoNdarkuzhAm sArin gathi andRi vERilai kAN thaNdu thAvadi pOith thEril kariyil pariyil thiribavar selvam ellAm neeril poRi endRu aRiyAdha pAvi nedu nenjamE. O' mind, there is no other refuge anywhere for you except joining the group of devotees of ThirumurugapperumAn, who [in order to save all beings from tyranny] graciously hurled the shining lance at SUrapanman and the krauncha-hill. You have not realized that the entire wealth [of a king], who journeys around riding on chariot, elephant and horse while leading his army, is just like writing on the surface of water, O' mind, who has been a sinner for a long time! |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |