![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 47 பத்தித் திருமுகம் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 47 paththith thirumugam |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 47 ... பத்தித் திருமுகம் பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. ......... சொற்பிரிவு ......... பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப் புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே. ......... பதவுரை ......... திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தை அடியேன் கண்டேன். ஜீவனுடைய செயல்கள் கெட்டு ஒடுங்கியபோது அறிவாகிய தாமரை மலரில் கரைந்து பெருக்கெடுத்து எல்லா உலகங்களையும் கடந்து அவற்றின் கரை மீது புரளுகின்ற மேலான இன்பக் கடலில் [திருமுருகப்பெருமானின் வரிசையான அழகிய திருமுகங்கள் ஆறோடு பன்னிரண்டு தோள்களுமான இனிய அமுதத்தைக்] கண்டேன். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.52 pg 4.53 WIKI_urai Song number: 47 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
![]() | திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 47 - paththith thirumugam paththith thirumugam ARudan panniru thOLgaLumAith thiththiththu irukkum amudhu kaNdEn seyal mANdu adangkap budhdhik kamalaththu urugip perugip buvanam etRith thaththik karaipuraLum parama Anandha sAgaraththE. When the soul's past deeds were subdued and no more, I saw the sacred vision of the row of six beautiful faces and twelve shoulders of ThirumurugapperumAn in the shore-less ocean of Supreme Bliss as the eternally sweet nectar that arose in the lotus-flower-like-intellect, transcending the shores of all the worlds. |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |