![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 20 கோழிக்கொடியன் Kandhar AlangkAram by Thiru Arunagirinathar - 20 kOzhikkodiyan |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் mp3 ![]() ![]() | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 20 ... கோழிக்கொடியன் கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட்டாது உங்களத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வருமோ நும் மடிப்பிறகே. ......... சொற்பிரிவு ......... கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய் ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம் ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே? ......... பதவுரை ......... சேவலைக் கொடியாக உடைய திருமுருகப்பெருமானது திருவடிகளை வணங்காமல் இவ்வுலகில் வாழ்வதற்கு நினைக்கின்ற அறிவில்லாதவர்களே! உங்களுடைய வலிய தீவினையால் உண்டாகும் நோயாகிய ஊழினது பெரிய வலிமையானது செல்வத்தை அனுபவிக்க விடுவதில்லை. உங்களுடைய செல்வம் முழுவதையும் மண்ணில் ஆழமான குழியில் புதைத்து வைத்தீர்களாயினும் [உங்கள் உயிர் உடலைவிட்டு நீங்கும்போது] அந்தச் செல்வம் உங்கள் காலடியைப் பின்தொடர்ந்து வருமோ? |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.28 WIKI_urai Song number: 20 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 20 - kOzhikkodiyan kOzhikkodiyan adipaNiyAmal kuvalayaththE vAzhak karudhum madhiyilikAL ungkaL valvinainOi Uzhin peruvali uNNa ottAdhu ungkaL aththam ellAm Azhappudhaiththu vaiththAl varumO num adip piRakkE? O' fools, you think that you could live in this world without worshipping the Sacred Feet of ThirumurugapperumAn, who has the flag of rooster [sEval]; the great might of the affliction arising from the past deeds will not allow you to enjoy your wealth. Would all the wealth, which is buried in a deep pit under the earth, follow your footsteps [at the time when your soul leaves the body?] |
அனைத்து செய்யுட்கள் ஒலிவடிவத்துடன் அகரவரிசைப் பட்டியலுக்கு PDF வடிவத்தில் எண்வரிசைப் பட்டியலுக்கு English Transliteration of all verses For Alphabetical List in PDF format For Numerical List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |