Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 12  படைபட்ட வேலவன்
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 12  padaipatta vElavan
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 12 ... படைபட்ட வேலவன்

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
   தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
      துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம்
         இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.

......... சொற்பிரிவு .........

படைபட்ட வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும்
   தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து
      உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம்
         இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே.

......... பதவுரை .........

வேலாயுதத்தைத் தாங்கியுள்ள திருமுருகப்பெருமான்பால் வந்து
அருள்வயப்பட்டு வலிமை அடங்கிய சேவலானது வெற்றியைத்
தெரிவிக்கும் கொடியில் ஒரு சின்னமாக இடம்பெற்றது. அந்தச்
சேவலானது தன் சிறகை அடித்துக் கொண்டபோது கடலானது
கிழிபட்டு உடைந்துபோயிற்று; அண்டத்தின் முகடுகள் இடிந்து
உதிர்ந்தன; நட்சத்திரக் கூட்டங்கள் தடுமாற்றம் அடைந்தன.
ஏனைய மலைகளும் மகாமேரு மலையும் தூள்பட்டு இடிந்துவிட்டன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.21 
 WIKI_urai Song number: 12 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 12 - padaipatta vElavan

padaipatta vElavanpAl vandha vAgaip pathAgai ennum
   thadaipatta sEval siRagadikkoLLach chalathi kizhindhu
      udaipattadhu aNda kadAgam udhirndhadhu udupadalam
         idaipatta kundRamum mAmEru veRppum idipattavE.

The rooster (cockerel) came to the lance-bearing ThirumurugapperumAn, and the Lord humbled the mighty bird, which henceforth became a devotee as well as an emblem on the flag proclaiming the Lord's victory. The rooster beat its wings so forcefully that the sea was torn asunder and cracked; the roofs of the universe shook and dropped; the clusters of stars in the sky were destabilized; the hills in between and the great MahAmEru-mountain were battered and pulverized.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 12 - padaipatta vElavan

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]