Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Subramaniya Swami Devasthanam - Sungai Petani, Malaysiaஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்
சுங்கை பட்டாணி கெடா மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Subramaniya Swami Devasthanam  Flag of Kedah State
Sungai Petani Kedah Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

ஆலய வரலாறு

சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்தாபகர் மதிப்பிற்குரிய ஆதினம் அண்ணாசாமி பிள்ளை அவர்கள் மற்றும் அவர்களுடைய மகன் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே.பி. அவர்களின் திருப்பணி வேலைகள், அமரர் ஆதினம் அண்ணாசாமி பிள்ளை அவர்களின் பேரனும் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே.பி. அவர்களின் மகனுமாகிய திரு. சு. துரைசிங்கம் அவர்கள் வழங்கிய வரலாற்றுக் குறிப்பு குறித்த சில விளக்கங்கள்.

1. ஆதினம் அண்ணாசாமி பிள்ளை அவர்களின் முயற்சியால் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் 1914ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1924-ல் ஆலய அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் தனது முழுமையான ஈடுபாட்டை தேவஸ்தானத்திற்கு வழங்கி வந்துள்ளார். அவரது அளப்பரிய சேவையை 1940 முதல் 1999 வரை தந்துள்ளார். இடையில் ஆலய நிர்வாகம் இரண்டு முறை மாறினாலும் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் தேவஸ்தான மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் முழுமையாக அர்ப்பணித்தார்.

2. அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்களின் முயற்சியால் நமது ஆலயத்தில் கல்யாண மண்டபம் 1972-ல் ஆரம்பிக்கப்பட்டு 1974-ல் அதன் கட்டுமான வேலைகள் முடிக்கப்பட்டது. மேற்படி அனைத்து திட்டங்களும் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் ஆலயத்தின் கெளரவ செயலாளராக பொறுப்பில் இருந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.

3. அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் 1996-ல் மீண்டும் தேவஸ்தான தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்தம் செயலவை உறுப்பினர்களுடன் புதிய தேவஸ்தான கட்டுமான பணி வேலைகள் அமைப்பதென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு 12 மே 1997-ல் ஆலய பாலாலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிய ஆலய கட்டுமானப்பணி வேலைகள் முடிவடையும் வரை தேவஸ்தான பக்கத்தில் தற்காலிகமாக ஆலயம் அமைக்கப்பட்டது.

4. 1998 முதல் 2000-ல் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்களின் தலைமையில் புதிய நிர்வாகம் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. 15 ஆகஸ்ட் 1999-ல் அமரர் அ. சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு ஆலயத்தின் இடைக்கால தலைவர் திரு. சி. நந்தகோபாலன் அவர்களும் மற்றும் ஆலய நிர்வாகஸ்தர்களும் திருப்பணி வேலைகளை சிறப்பாக செய்து முடித்தனர். ஆலயத்தின் புதிய கட்டிட வேலைகள் முழுமைப்பெற்று மகா கும்பாபிஷேகம் 9 ஏப்ரல் 2000-ல் நடைபெற்றது.

ஆலயத்தின் தற்போதைய தலைவர் திரு. சி. நந்தகோபால் அவர்களும் துணைத்தலைவர் திரு பி. முனியாண்டி அவர்களும் ஆலயத்தைப்பற்றிக் குறிய சில விளக்கங்கள்.

இந்த ஆலயம் ஆரம்பிப்பதற்குமுன் இதன் இடத்தில் ஒரு மேஜிஸ்த்திரேட் நீதி மன்றம் இருந்தது. இந்த ஆலயத்தை கட்டுவதற்காக 1918-ல் திரு. அண்ணாசாமி அவர்கள் இந்த நிலத்தை அரசாங்கத்திடமிருந்து வாங்கினார்கள். 1924-ல் முதல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1936-ல் இது ஒரு பெரிய ஆலயமாக கட்டி முடிக்கப்பட்டது.

பிரும்மாண்டமான ராஜகோபுரத்துடன் கெடா மாநிலத்தின் ஒரு பெரிய கோயிலாக புதுப்பிக்கப்பட்டு 9 ஏப்ரல் 2000-ல் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு உகந்த விழாக்கள் அனைத்தும் இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. தைப்பூசத் திருநாள் மிகவும் விசேஷமாக பத்து நாள் உபயங்களுடன் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 6000 பால்குடங்களுடன் நூற்றுக்கணக்காண அலகுக் காவடிகளை இங்கேயும் மற்ற இடங்களில் வசிக்கும் இந்திய, சீன பக்தர்கள் வழிபட வருவார்கள்.

இந்தக் கோயிலுக்கு வருகை புரிந்த பெரியோர்களுள் திருமுருக கிருபானந்த வாரியார், கவிஞர் கண்ணதாசன், மதுரை ஆதினம் ... அவர்களும் அடங்குவர். இவர்கள் சமயச் சொற்பொழிவுகளை நடத்தி இக்கோயிலுக்கு பெருமை சேர்த்தார்கள். இங்கு வருகை புரிந்த பிள்ளையார் பட்டியின் பிச்சை குருக்கள் இக்கோயிலின் அமைப்புமுறை, நடைமுறைகளைக் கண்ணுற்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.>

Temple History

The Founder of Sri Subramaniya Swami Devasthanam at Sungai Petani is honorable Sri Annaasamy Pillai. The building and renovation of this temple by Sri Annaasamy Pillai and his son, the late Sri A. Subramaniam J.P. is described below by Mr. S. Duraisingam, who is the grandson of Sri Annaasamy Pillai, and son of Sri A. Subramaniam J.P.

With the great efforts of Sri Annaasamy Pillai, the construction of the temple began in 1914. The first Maha Kumbabishegam was held in 1924. Sri A.Subramaniam J.P. devoted all his time and effort to this temple. He served here from 1940 to 1999. Although the temple management had changed twice during this period, Sri A. Subramaniam J.P. had continued his participation and support for the growth of it.

Construction of a wedding hall began in 1972 with the efforts of Sri A. Subramaniam J.P. This hall was completed in 1974.

In 1996, a renovation plan was made for the temple. On 12th May 1997, a Maha Kumbabishegam was held at the temple's Baalaalaya (temporary place) which was built beside it.

Following the departure of Sri A.Subramaniam J.P. on 15th August 1999, Mr. S. Nanthagopalan, the interim President, and the management board successfully completed the renovation. The Maha Kumbabishegam of this newly renovated temple was held on 9th April 2000. The temple now has a majestic looking Raja Goburam and an artistic structure.

Following are some information of the temple provided by the President, Mr. S. Nanthagopalan and Vice-President, Mr. P.Muniandy:

The temple stands on the ground of a former Majistrate Court. In 1918, Sri Annaasamy Pillai acquired this land from the government to build this temple. After the first Maha Kumbabishegam in 1924, the temple was extended and completed in 1936.

All auspicious days for Lord Subramaniyar are celebrated here. Thaipusam is celebrated grandly with 10 days of Ubayam and 3 days of offering milk pots and kavadis. Around 6000 milk pots and 700 Kavadis are carried by devotees from local and other states.

Among the celebreties who have visited this temple are ThiruMuruga Kirubaanantha Vaariyaar, Kavingyar Kannathaasan, Sri Madurai Aathinam and Sri Pitchai Gurukkal. These celebreties gave very good speeches on literature and religion during their visit. Sri Pitchai Gurukkal, from Pillaiyaar Patti, was very impressed with the temple's structure and it's formalities.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple



ஆலய நேரங்கள்

temple timings

5:30 am – 12 noon
5 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Subramaniya Swami Devasthanam,
551, Jalan Kuala Ketil,
Sungai Petani,
Kedah,
MALAYSIA
Postcode: 08000
Telephone: +6 04 421 2076


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.638550, 100.492847

Sri Subramaniya Swami Devasthanam - Sungai Petani, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Subramaniya Swami Devasthanam - Sungai Petani, Kedah, Malaysia
(kdcmyb06)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]