Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Singara Vadivelavar Temple Malaysiaஸ்ரீ சிங்கார வடிவேலவர் ஆலயம்
ஜெரண்டுட் பஹாங் மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Singara Vadivelavar Temple  Flag of Pahang State
Jerantut Pahang Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஜெரண்டுட் ஸ்ரீ சிங்கார வடிவேலவர்
ஆலயத்தைப் பற்றி
About the temple


ஸ்ரீ சிங்கார வடிவேலவர் ஆலயத் தோற்றம் / வரலாறு.

குன்று தோறும் குமரன் என்பது போன்று, தமிழர்கள் வாழும் இடத்தில்
கோயிலில்லாமலில்லை. கோயிலில்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்
என்ற முதுமொழியைப் பின்பற்றுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.


இக்கோயில் 1945-ம் ஆண்டு முதல் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலாக இருந்துள்ளது. அவ்வமயம் திரு. மாதவன் நாயர் என்பவரின் கண்காணிப்பில் இயங்கி வந்துள்ளது. இந்தியர்களின் மக்கள் தொகை அதிகரிக்கப்பட்டவுடன், ஆலயம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது.

ஆலயம், நிர்வாக முறைக்கு வந்ததும் திரு. M.S. லிங்கம் J.P., P.P.N. அவர்கள் தலைவராகவும், காலஞ்சென்ற திரு. J.T. இரத்தினம் சிங்கம் அவர்கள் உப தலைவராகவும் கொண்ட செயற்குழு நியமிக்கப்பட்டது. அன்னவர்களின் காலத்தில் புதிய நிர்வாகத்தினர் கோயில் கட்டவேண்டும் என்ற தீவிர பணியில் ஈடுபட்டனர். இதற்குதவியாகப் பொறியியல் வல்லுனராக இருந்த திரு. S. பூபாலசிங்கம், திரு. S. மாணிக்கம், திரு. G. ராமகிருஷ்ணன் அவர்களின் அரும்பெரும் தொண்டால் ஆலயத் திருப்பணி செயல்பட ஆரம்பித்தது. ஆலயத் திருப்பணி அடிக்கல் நாட்டுவிழா 1965-ம் ஆண்டு, மாவட்ட அதிகாரியான ஹாஜி ஓஸ்மான் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திருப்பணி செலவிற்காக மாண்புமிகு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் முயற்சியில் மத்திய அரசாங்கம் RM 15,000 கொடுத்துதவியது. இப்பணம் பத்தாமல் போகவே இருமுறை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு, RM 3,000 வெள்ளியும் மறுமுறை RM 4,000 வெள்ளியும் கிடைத்தது. இவ்வெள்ளியில் ஆலய சுற்றுப்புறத்தை சுற்றிலும் வேலியும், மடப்பள்ளி ஒன்றும், அர்ச்சகர் வீடும், மண்டபத்தில் மேடையும் அமைக்கப்பட்டது.

30.03.1966 முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது தொழிலாளர் அமைச்சராக இருந்த மாண்புமிகு டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் அவர்கள் கலந்துகொண்டார்கள்.

20.08.1975 இல் புதிதாக நவக்கிரக மண்டபம் அமைந்தது. ஸ்ரீ அம்பாள் ஷ்தாபனம் செய்து இரண்டாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமரர் R. பத்மநாபன், துணை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சி. சுப்ரமணியம், நாடாளுமன்றச் செயலாளர், தொழிலாளர் ஆள்பல அமைச்சு கலந்து கொண்டர்கள். அமரர் தலைவர் எஸ். மாணிக்கம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

3 வது மகா கும்பாபிஷேகம், கடந்த 27.01.1985 இல், திரு. கு. இராமகிருஷ்ணன் தலைமையில் ஆகம முறைப்படி நடைபெற்றது. வீடமைப்பு - ஊராட்சித் துறை துணையமைச்சர், மாண்புமிகு சி. சுப்பரமணியம் கலந்து சிறப்பு செய்தார்கள்.

தொடர்ந்து, 10 ஆண்டு காலமாக ஒரு திருமண மண்டபம் நமது ஆலயத்தில் மேற்கொண்டு கட்ட நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றிபெற்றது. 02.03.1997 இல் RM 250,000.00 செலவில் கட்டப்பட்ட மண்டபம் திறப்பு விழா கண்டது. மக்கள் தலைவர் டத்தோ சி. சுப்பரமணியம், அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இம்மண்டபம் எழுப்ப, நன்கொடை வழங்கிய, வசூல் செய்த, இரு டாக்டர்கள், டாக்டர் R. பத்மநாபன், டாக்டர் வில்பிராட் ஜோன் அவர்களுக்கு, நிர்வாகம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

2002 ஆம் வருடம் தொகுதி ம.இ.கா. முயற்சியால், ஜெரண்டுட் நாடாளுமன்ற உறுப்பினர், மாண்புமிகு துங்கு அஸ்லான் அவர்கள், அரசாங்க மாண்யமாக RM 80,000.00 மூலம் உணவு மண்டபம் அமைக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு ஆலயத் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஜெரண்டுட் ஆலய உறுப்பினர்கள், பொது மக்கள் உதவி, ஒத்துழைப்பு வழங்கியதால் கட்டம் கட்டமாக கட்டிட வேலைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்தபதி வேலைகள், புதிய சன்னதிகள், சாலை கீரகம், மூலஸ்தான கோபுரம், நவக்கிரக மண்டபம், மணிமண்டபம் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 6 லட்சம் வெள்ளி செலவில் வர்ணம் பூசும் வேலைகள் முடிவுற்றது.

(தொகுப்பு கு. இராமகிருஷ்ணன்).


Jerantut Murugan Temple
ஆலயத்தின் முன்னாள் தோற்றம்

former view of the temple

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

வைகாசி விசாகம் (10 நாள் உபயம்)
VaigAsi VisAgam (10 days)


ஆலய நேரங்கள்

temple timings

6:30 am - 9 am
6:30 pm - 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Singara Vadivelavar Temple
Batu Satu, Jalan Benta,
Jerantut,
Pahang,
MALAYSIA
Postcode: 27000


ஆலயம் இருக்கும் இடம்   (கூகள் மேப்ஸ்க்கு நன்றி)
temple location   (courtesy of Google Maps)
3.925561, 102.354495



For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Singara Vadivelavar Temple - Jerantut, Pahang, Malaysia
(kdcmyb26)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]