Murugan Temple GopuramKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

உலகளாவிய
முருகன் ஆலயங்கள்

Worldwide
Murugan Temples

Sri Kaumara Chellam
Sri Thendayuthapani Temple - Bukit Mertajam, Malaysiaஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
புக்கித் மெர்த்தாஜாம் பினாங்கு மாநிலம் மலேசியா

Flag of Malaysia  Sri Thendayuthapani Temple  Flag of Penang State
Bukit Mertajam Penang Malaysia
history address timings special events previous-other names location map

இணைய ஆசிரியர்களின் குறிப்பு:
'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் பொருப்பல்ல
என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.

Webmasters' note:
Please be advised that we are not responsible for the accuracy of details
given in Kaumaram.com. Thank You.



இத்தலத்தின் முன்னாள்/மற்ற பெயர்கள்
Previous-Other names of this Venue

ஆலயத்தைப் பற்றி
About the temple

சுங்குரும்பையின் தோற்றம்



லெல்லஸ்லி மாகாணத்தின் சிறந்த நகரம், சுங்குரும்பை. சுங்ஙை-ரம்பை என்ற இரு மலாய் வார்த்தைகள் மருவி, சுங்குரும்பை என்ற பெயராகியது. சுங்ஙை என்றால் ஆறு. ரம்பை என்றால் உயர்ந்த வாசனைச் செடி. இவ்வாசனைச் செடிகள் இவ்வாற்றங்கரை ஓரம் அதிகம் இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. இந்நகரை ஆங்கிலேயர்களும், சீனர்களும் புக்கிட் மர்ட்டஜம் என்று கூறுவர். புக்கிட் என்றால் மலை, மர்ட்டஜம் என்றால் கூரிய சிகரம் என மலாய் பாஷையில் பொருள்படும். இம்மலைச் சிகரம், பினாங்கின் கொடிமலையுடன் சமநீர் மட்டம் கொண்டதாகவுள்ளது. இங்கு ஜாதிக்காய், ஜாதி பத்திரி, லவுங்கம் முதலிய பயிர்கள் பெரும் சாகுபடியாகிக் கொண்டிருந்தன. 1900-ம் ஆண்டின் பின் இவ்விளைவுகள் குறைந்து, வேறு பயிர்களாகிய ரப்பர் முதலியன மிகுந்து வருகின்றன. இந்நாட்களில் இந்நகரம் ஒரு ஜில்லா ஆபீஸின் இருப்பிடமாகவுள்ளது. இருப்புப்பாதை நிலையத்தின் கிளை ஆபீஸும் இங்குள்ளது. பினாங்கிலிருந்து புறப்படும். எப். எம். எஸ். இரயில்கள் இங்குவந்துதான் இருவழிகளாகப் பிரிகின்றன. ஒன்று கோலாலம்பூர், சிங்கப்பூர் செல்லும் வழி. மற்றொன்று கெட்டா, பாடாங் புசார், சயாம் செல்லும் வழி. இவ்வழிகள் இங்கு பிரிவதால் எந்த இரயிலும் இங்கு வந்துதான் செல்லவேண்டும். இவ்வூர் மிகச் சிறியதாய் இருப்பினும் பல வளங்களும் பொருந்தியது. இங்கு தபால், தந்தி, டெலிபோன் நிலையங்களும்,போக்குவரத்து வசதிகளுக்கேற்ற வழிகளும் இருப்பதால் கூடிய அளவு வாணிபம் செழித்தோங்குகிறது. இவ்வாணிபத்தைப் பெருக்க பல நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடைகள் இருக்கின்றன. நகரத்தார்கள் தொழிலுக்காகச் செல்லுமிடம் எல்லாம் கந்தனுக்கு ஆலயம் காண்பதைப் போல, இங்கும் ஒர் ஆலயம் கண்டிருக்கிறார்கள். இவ்வாலயம் 1897-ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளி இருக்கும் கந்தனுக்கு பங்குனி உத்தரத்தில் விழா நடத்துவார்கள். அப்போது ஏராளமான அன்பர்கள் வந்து தரிசித்துப் பலன் பெறுவர். அவர்களுக்கு நகரத்தார் அன்னதானம் இடுவார்கள். அவ்வைபவமும் விழாவின் மேன்மையும் நேரிற் கண்டானந்திக்க வேண்டியவைகளில் ஒன்று.

இவ்வாலயத்தைப் போல மங்களாம்பிகைக்கு ஒரு ஆலயமும் நிறுவப்பெற்றிருக்கிறது. அம்மங்களாம்பிகை கோயிலில் நடைபெறும் தீமிதியன்று ஏராளமாக சீனர்களும் ஆங்கிலேயர்களும், மற்றவர்களும் வந்து பார்த்து இன்புறுவர். இவ்வாலயம் இரண்டையும் கட்டுவதற்கு முன் நின்றவர் திரு. முத்துப்பழநியப்ப செட்டியார். இவைகளில் மங்களாம்பிகை ஆலயத்துக்கு வலப்பாகத்தில் அமைந்திருக்கிறது ஓர் கல்வி நிலையம். இந்நிலையத்தை தன் சொந்தப் பொறுப்பில் அமைத்து நடத்தும் திரு. முத்துப்பழநியப்ப செட்டியார் இதற்கு "இராமநாதன் வித்தியாசாலை" என்ற பெயரைச் சூட்டி இருக்கிறார். இந்த வித்தியாசாலையில் பல ஏழை மாணவ, மாணவிகளுக்கு தமிழ்க் கல்வியும், தையல், பின்னல் மற்ற தொழில்களும் கற்றுக்கொடுக்கப் பெறுகிறது. இதனால் தமிழ் மக்கள் பெறும் பலன் பல. இதேபோல ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக்கூடங்களை நடத்தப் பலர் முன் வந்தால் தமிழ் மக்கள் மிக விரைவில் முன்னேற்றம் பெறுவார்கள் என்பது திண்ணம். இவ்வாலயங்களையும், பள்ளிக்கூடத்தையும் வாணிபச் சிறப்பையும் பெற்று விளங்கும் சுங்குரும்பையின் தோற்றம் போற்றத்தக்கதே.

ஆலயத்தின் சிறப்பு விழாக்கள்

special occasions at temple

பங்குனி உத்திரம்
Panguni Uththiram


ஆலய நேரங்கள்

temple timings

6 am – 12 noon
4 pm – 9 pm


ஆலயத்தின் முகவரி

Address of temple

Sri Thendayuthapani Koil,
Jalan Datok Ooh Chooi Cheng,
Bukit Mertajam,
Pulau Pinang,
MALAYSIA
Postcode: 14000
Telephone: +6 04 537 5197


ஆலயம் இருக்கும் இடம்
(கூகள் மேப்ஸ்க்கு நன்றி)

temple location
(courtesy of Google Maps)

scan the QR image on the right,
using a QR reader app on your
smart phone to copy the GPS co-ordinates
5.362340, 100.462887

Sri Thendayuthapani Temple - Bukit Mertajam, Malaysia

For help in making this:  PC  -  Android  -  IPHONE & IPAD 
இந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து
அவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.
send note to Kaumaram Webmasters

A kind request from the Webmasters of Kaumaram.com
Please send us other details about this temple.
Thank You.
மலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்
Malaysia Singapore India Mauritius Sri Lanka Europe Other Countries

Worldwide Murugan temples and temples with Murugan Sannithis
Sri Thendayuthapani Temple - Bukit Mertajam, Penang, Malaysia
(kdcmya16)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   கௌமாரம் அட்டவணை   மேலே   தேடல் 
 home   Kaumaram contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]